அரசு ஊழியர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சி... தமிழக அரசின் தாறுமாறு உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published May 7, 2020, 11:01 AM IST
Highlights

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. 

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும் 59-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவன பணியாளர்களின் ஓய்வு வயதும் 59ஆக அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது’’ என அறிவிகப்பட்டுள்ளது. 

இதனால், தமிழக அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

click me!