மு.க.ஸ்டாலின் தொகுதியில் ரிசல்ட் தாமதமாகலாம்... மாநகராட்சி ஆணையர் அதிர்ச்சி அறிவிப்பு..!

Published : May 01, 2021, 05:57 PM IST
மு.க.ஸ்டாலின் தொகுதியில் ரிசல்ட் தாமதமாகலாம்... மாநகராட்சி ஆணையர் அதிர்ச்சி அறிவிப்பு..!

சுருக்கம்

கொளத்தூர் தொகுதியில் திமுக முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் களமிறங்கி உள்ளார். ஆகையால் மாநகராட்சி ஆணையரின் இந்த அறிவிப்பு விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது. 

சென்னையில் அதிக வாக்குச்சாவடிகள் உள்ள கொளத்தூர் தொகுதி முடிவுகள் தாமதமாகலாம் எம சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் அதிக வாக்குச்சவடிகள் உள்ளதால் அங்கு முடிவுகள் தெரிய 20 மணி நேரம் கூட ஆகலாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பல்லவன் சாலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா பரிசோதனை மையத்தைதிறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ், ’’ சென்னையில் 6 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் இருக்கின்றன. குறைந்த பட்சம் தி நகரில் 14 மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடியும்’’ எனத் தெரிவித்தார். கொளத்தூர் தொகுதியில் திமுக முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் களமிறங்கி உள்ளார். ஆகையால் மாநகராட்சி ஆணையரின் இந்த அறிவிப்பு விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!