புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் தேவை.. மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை சுற்ற்றிக்கை.

Published : Dec 29, 2020, 04:04 PM IST
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் தேவை.. மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை சுற்ற்றிக்கை.

சுருக்கம்

covid-19 நோயாளிகளின் கண்காணிப்புக்கு பொருந்தும் வழிகாட்டுதலின் காலம் 2021 ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும், அதே போல் பிரிட்டனில் பரவிவரும் புதிய வகை வைரஸை தடுப் பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. அதேவேளையில் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில்  கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 16 ஆயிரத்து 432 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா கூறியுள்ளது. கடந்த ஜூன் 23 க்கு பிறகு மிகக் குறைந்த அளவிலான பாதிப்பு இது என கூறப்படுகிறது. அன்று வெறும் 15,656 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 2 லட்சத்து 24 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 900 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்து எண்ணிக்கை 98 லட்சத்து 7 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா எழுதிய கடிதத்தில் நாட்டின் புதிய கொரோனா தொற்றுகள் மற்றும் செயலில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. எனவே கூடுதல் எச்சரிக்கையுடன் மாநில அரசுகள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தேவைப்பட்டால் மாநில அரசுகள் உள்ளூர் மட்டத்தில் இரவு ஊரடங்கு போன்ற உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கலாம் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

covid-19 நோயாளிகளின் கண்காணிப்புக்கு பொருந்தும் வழிகாட்டுதலின் காலம் 2021 ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும், அதே போல் பிரிட்டனில் பரவிவரும் புதிய வகை வைரஸை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கான  முன்னுரிமை அளிக்க NEGVAC தயாரிக்கப்பட்டுள்ளது என்றும்,  தடுப்பூசிக்கான முன்னுரிமை சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு அதிக ஆபத்துள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும். எனவே அத்தகைய நபர்களின் தரவுகளை இறுதி செய்து பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

தடுப்பூசி சேமிப்பு, போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் வைரஸ் தடுப்பு உள்ளிட்ட பிற ஏற்பாடுகள் முகக் கவசங்கள் மற்றும் சமூக இடைவெளி விதிகளை கண்டிப்பாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கோவி ஷீல்ட் 5 கோடி டேஸ் தயார் நிலையில் உள்ளது என்றும் கோவிஷீல்ட் இன்ஸ்டியூட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார்  பூனவல்லா கூறியுள்ளார். மேலும், தங்கள் நிறுவனம் 4 முதல் 5 கோடி டோஸ் கோவிஷீல்ட் கையிருப்பில் வைத்திருக்கிறது, தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு இன்னும்  சிலநாட்களில் அனுமதிக்க படலாம்.  அதற்குப் பிறகு எத்தனை டோஸ் எவ்வளவு விரைவில் தேவை என்பதை மத்திய அரசு தீர்மானிக்க வேண்டும். ஜூலை 21ற்குள் தங்கள் நிறுவனம் 30 கோடி டோஸ்வரை வரை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக பூனவல்லா தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

'ராமதாஸ் - அன்புமணி சமரசத்துக்கு நான் கேரண்டி'.. இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்.. பாமகவுக்கு இத்தனை சீட்களா?
விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!