அதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..? உறுதிப்படுத்திய டி.டி.வி.தினகரன்..!

Published : Jun 17, 2019, 04:49 PM ISTUpdated : Jun 17, 2019, 04:51 PM IST
அதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..? உறுதிப்படுத்திய டி.டி.வி.தினகரன்..!

சுருக்கம்

கர்நாடக சிறை விதிகளின் படி நன்னடத்தையை பின்பற்றி அவர் முன்பே விடுவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. அவர் விரைவில் விடுதலையாகி அதிமுக தலைமை பதவியை ஏற்றுக்கொள்ளப்போகிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது.

சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என எந்த கோரிக்கையும் தரப்பில் இருந்து வைக்கப்படவில்லை என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார் சசிகலா. நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற நிலையில், இன்னும் இரண்டு ஆண்டு தண்டனையை அவர் கழிக்க வேண்டும். இந்நிலையில் கர்நாடக சிறை விதிகளின் படி நன்னடத்தையை பின்பற்றி அவர் முன்பே விடுவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. அவர் விரைவில் விடுதலையாகி அதிமுக தலைமை பதவியை ஏற்றுக்கொள்ளப்போகிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ‘’சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என எந்த கோரிக்கையும் எங்கள் தரப்பில் இருந்து வைக்கப்படவில்லை. சசிகலா பரோலில் வெளிவருவதற்கும் தற்போது எந்த காரணமும் இல்லை’’ எனக் கூறியுள்ளார். இதன் மூலம் சசிகலா நன்னடத்தை விதிகளின் படி விடுதலையாக தங்களது தரப்பில் இருந்து எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என டி.டி.வி.தினகரன் தெளிவுபடுத்தி உள்ளார்.

 

சசிகலா அதிமுக தலைமை பொறுப்பேற்பதாக கூறப்பட்டதையும் டி.டி.வி.தினகரன் வதந்தி என அவர் உறுதிபடுத்தி உள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!