
மத்தியஅரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்கிற பா.ஜ.கவின் கோரிக்கையை உடனடியாக ஏற்க அ.தி.மு.க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்ற மக்களவையில் மோடி அரசு மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ளது. விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிக்க தேவையான எம்.பிக்கள் பா.ஜ.க வசம் உள்ளது.