பி.சி.ஆர் சட்டத்தை பயன்படுத்தி கட்ட பஞ்சாயத்து... நாடகக் காதலர்களுக்கு எதிராக பொங்கியெழுந்து அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Apr 14, 2020, 1:01 PM IST
Highlights
பி.சி.ஆர் எனப்படும் சாதிய வன்கொடுமை சட்டத்தை தடை செய்ய வேண்டும் என பலத்த கோரிக்கை எழுந்துள்ளது. 
 
சமூக நல்லிணக்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்க கூடிய பிற சாதியினரை பழிவாங்கக்கூடிய பி.சி.ஆர் எனப்படும் சாதிய வன்கொடுமை சட்டத்தை தடை செய்ய வேண்டும் என பலத்த கோரிக்கை எழுந்துள்ளது. 

சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளான இன்று ட்விட்டரில் #BAN_PCR_ACT என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி பி.சி.ஆர் சட்டத்தை தடை செய் என பலரும் கருத்து தெரிவித்து முதலிடத்தி ட்ரெண்டிங்க் ஆக்கி வருகின்றனர்.

இந்தியாவில் 1955-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976-ல்  பி.சி.ஆர் அதாவது குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் என்று  மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது மத்திய அரசு.

இந்த வன்கொடிமை சட்டத்தால் எத்தனை குடும்பங்கள் அழிந்து இருக்கும்.
பொய் வழக்கு பதிந்தால் சமத்துவம் எப்படி பிறக்கும்.

— ⚔ RamnadLegend ⚔ (@ramnadlegendoff)


அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில், கடந்த 1989-ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டமும் வலுவாக  இல்லை என்று குரல்கள் ஒலித்த நிலையில், வன்கொடுமை  தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்து புதிய மசோதாவை கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த திருத்தத்துடன் கூடிய  வன்கொடுமை தடுப்புச் சட்டம் -(2015) கடந்த  ஜனவரி  மாதம் அமலுக்கு வந்தது.



தன்‌ வீட்டை தானே கொளுத்திக்கொண்டு அப்பாவி மீது போலி PCR வழக்கு பதிவு செய்த கொடுமை😢 pic.twitter.com/g1fu884sUF

— Jackson Durai (@JacksonDurai11)


ஆனாலும், 2015-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் 15 முதல் 16 விழுக்காடு போலி வழக்குகள் என தெரியவந்தது. எனவே அப்பாவி பொதுமக்களை மதம் அல்லது சாதியின் பெயரால் பாதிப்புக்குள்ளாக்குவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். சாதி ரீதியான கொடுமைகளை நீக்க கொண்டு வரப்பட்ட சட்டம் சாதியை நிலைநிறுத்த பயன்படக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.



தன்‌ வீட்டை தானே கொளுத்திக்கொண்டு அப்பாவி மீது போலி PCR வழக்கு பதிவு செய்த கொடுமை😢 pic.twitter.com/g1fu884sUF

— Jackson Durai (@JacksonDurai11)


வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, எந்தத் தவறும் செய்யாத அப்பாவி ஒருவரை எந்தவிதமான விசாரணையும் இன்றி கைது செய்து சிறையில் அடைக்க முடியும் என்றால் நாம் நாகரிகமான சமுதாயத்தில் வாழவில்லை என்று தான் பொருளாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனாலும் இந்தச் சட்டத்தால் இப்போது வரை அப்பாவி மக்கள் பழிவாங்கப்பட்டு வருவதாக புகார்கள் கிளம்பி வருகின்றன.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட்டு வரும் பலரும், ‘’கெட்ட வார்த்தை சொல்லி திட்டினாலும் கூட, சாதாரண வழக்கு தான் பதியப்படும். ஆனால், சில சாதி பெயரை சொல்லி திட்டினால் ஜாமினில் வரமுடியாத பி.சி.ஆர் வழக்கு பதியப்படுகிறது. கெட்ட வார்த்தைகளை விட மிகப்பெரிய கெட்ட வார்த்தையாக சில சாதிகளை அடையாளப்படுதும் சட்டம் கைவிடப்பட வேண்டும்.



தன்‌ வீட்டை தானே கொளுத்திக்கொண்டு அப்பாவி மீது போலி PCR வழக்கு பதிவு செய்த கொடுமை😢 pic.twitter.com/g1fu884sUF

— Jackson Durai (@JacksonDurai11)


பாதிக்கப்பட்டவர்களை விட, தங்களுக்கு பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பிறப்பால் யாரும் உயர்வு தாழ்வு இல்லை எனும் நிலையில் குறிப்பிட்ட சிலரை தாழ்ந்தவர்கள் எனக்கூறி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை இயற்றியது தவறில்லையா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

’’பெண்ணின் கழுத்தில் இருக்கும் தாலியை அறுத்துக்கொண்டு ஒருவன் ஓடுகிறான். மக்கள் அவனை திருடன் என்ற முறையில் பிடித்து தர்மஅடி கொடுக்கிறார்கள். ஆனால், அந்த திருடன் ’தான் ஒரு தலித் என்பதால் தான் தாக்கப்பட்டேன்’ எனக்கூறி அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய செய்கிறான். நாட்டு மக்களிடையே சமூக நல்லிணக்கத்திற்கு தடையாக இருக்கும் வன்கொடுமை சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும்’’ என்றும் கூறி வருகின்றனர்.

95% வன்கொடுமை சட்டங்கள் போலியாகவே பதியப்படுவதாக ஆய்வுகளும் தரவுகளும் கூறுகின்றன. ஆக அடுத்தவனை பழிவாங்க பயன்படுத்தப்படும் சட்டமான வன்கொடுமை சட்டம் வாபஸ் செய்யப்பட வேண்டும்.

— Kshatriyan Vignesh (@KshatriyanV)


PCR என  ஒரு சட்டத்தை வைத்து கட்ட பஞ்சாயத்து, நிலம் அபகரிப்பு, நாடக காதல், அத்துமீறல் என ஏகபோகமாக தொழில் செய்கிறார்கள். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் வாழ்கையை நாசமாக்கிய இந்த சட்டத்தை தடை செய்ய வேண்டும்.’’ என காட்டசாட்டமாக பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

உழைத்து வாழ தகுதியற்ற கூட்டத்தை சட்டத்தின் பாதுகாப்புடன் வாழ வைக்கும் சட்டம் தான் வன்கொடுமை தடுப்பு சட்டமா ?? pic.twitter.com/5lzcyIiftJ

— வந்தியத்தேவா (@deva7nandhini5)

கத்தியையோ துப்பாக்கியையோ காட்டி பணம் பறிச்சா அது வடநாடு

PCR சட்டத்தை வச்சி மிரட்டி பணம் பறிச்சா அது தமிழ்நாடு..

— மோகன். தமிழ் பிரியன் (@Mohankuppakaun6)

கெட்ட வார்த்தை சொல்லி திட்டினாலும் கூட சாதாரண வழக்கு தான் பதியப்படும். ஆனால் சில சாதி பெயரை சொல்லி திட்டினால் ஜாமினில் வரமுடியாத Pcr-ல் வழக்கு பதியப்படுகிறது. கெட்ட வார்த்தைகளை விட மிகப்பெரிய கெட்ட வார்த்தையாக சில சாதிகளை அடையாளப்படுதும் சட்டம் கைவிடப்படவேண்டும்.

— KAMAL (@kamalpmk)

 
click me!