முதன்முறையாக பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி

 
Published : Jan 26, 2017, 09:42 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
முதன்முறையாக பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி

சுருக்கம்

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி முதன் முறையாக அரசு விழா மேடையில் அமர்ந்தார்.

மறைந்த முதலவர் ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார் ஓ.பன்னீர்செல்வம்.

பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேல் ஆன நிலையில் முதன்முறையாக மிகப்பெரிய அரசு விழாவில் ஓபிஎஸ் பங்கேற்றார்.

இதில் பல முதல்கள் உள்ளுக்குள் வந்தன.

குறிப்பாக தமிழகத்துக்கு தனி கவர்னர் இல்லாததால் தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரு முதலமைச்சர் குடியரசு தின விழாவில் கொடியேற்றினார்.

அதே போன்று ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எந்த ஒரு அரசு விழாவிலும் ஓ.பன்னீர்செல்வம் தனது மனையை அழைத்து வரமாட்டார்.

ஆனால் முதன்முறையாக அவரது மனைவி பி.விஜயலட்சுமி ஓபிஎஸ்சுடன் அமர்ந்து குடியரசு தின கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

முதல்முறையாக மிகப்பெரிய பொது நிகழ்ச்சி ஒன்றில் ஓபிஎஸ் தனது மனைவியையும் அழைத்து வந்திருந்தது பார்த்தவர்கள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை  அளித்தது.

PREV
click me!

Recommended Stories

அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
தவெகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கும் அதிமுக.. விஜய் போட்ட ஒரே நிபந்தனை... டரியலாகும் இபிஎஸ்..!