
அதிமுக எங்கள் கட்சி என கூறுவதை நடராஜன் நிறுத்திக் கொள்ளவேண்டும் , அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சசிகலாவுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அப்போது அவர் கூறியதாவது:
எம்ஜிஆர் ஆட்சிகாலத்திலும் சரி ஜெயலலிதா ஆட்சிகாலத்திலும் சரி உறவினர்களுக்கு இடமளிக்கவில்லை. ஆனால் தற்போது குடும்ப அரசியல் நடந்து வருகிறது.
ஒன்றை கோடி தொண்டர்களில் 2500 தொண்டர்கள் மட்டுமே பொதுச்செயலாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மீதமுள்ள தொண்டர்கள் அமைதியாக பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அன்பை பெறும் வகையில் பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்.
ஜெயலலிதாவை ஏ.கே.47 ஆயுதம் திவகாரன் தான் காப்பாற்றி வந்தார் என நடராஜன் கூறியுள்ளார். ஆனால் இந்த ஆயுதம் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த ஆயுதம் சாதாரண மனிதர்களிடம் இருக்காது.
அப்படி பட்டவர்களிடம் இருந்து இருந்தால் இவர் பதில் சொல்ல வேண்டும். ஏகே-47 ஆயுதத்தை வைத்து ஜெயலலிதாவை திவாகரன் பாதுகாத்து வந்ததாக சொல்லியிருக்கிறார். ஏ.கே-47 ஆயுதம் என்பது எஸ்பி ரேங்கில் உள்ளவர்கள் கூட அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்த வேண்டும். அப்படி இருக்கும் போது யாரை ஏமாற்ற இப்படி பேசிவருகிறார் நடராஜன்.
துணை சபாநாயகர் தலைமை பண்பில்லாமல், அரசாங்க உயர் பதவியில் இருப்பவர் பொதுச் செயலாளரை முதல்வராக வர வேண்டும் என சொல்கிறார். முதல்வர் மீது தம்பிதுரைக்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி. பிரமருக்கும் முதல்வருக்கும் உள்ள உறவை தம்பிதுரை சீர்குலைக்க பார்க்கிறார்.
நடராஜனும், தம்பிதுரையும் பிரதமரை விமர்சித்து கட்சிக்குள் குழப்பத்தை உண்டுபண்ண பார்க்கிறார்கள். இவர்களை கண்காணிக்க வேண்டும்.
நடராஜன் அதிமுகவுக்கு செய்த துரோகத்தால்தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் -அப்போது அவர், ‘’அதிமுகவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதால் ம.நடராஜனை கட்சியை விட்டு விலக்கி வைத்திருந்தார் ஜெயலலிதா.
முதன்முதலில் சசிகலாவிடம் பேசியதே 2011 ஆண்டு தான். 1991 ம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் சட்ட மன்ற வேட்பாளராக நின்ற போது பலமுறை பர்கூர் வந்திருக்கிறார். அவருடன் சசிகலாவும் வந்திருக்கிறார்.
நான் அவரிடம் பேசியது 2011ம் ஆண்டு தான். என்னை நக்சலைட் என்றும், தனது காலில் விழுந்ததால்தான் எம்.ஜி.ஆர். மன்ற பதவி கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார் நடராஜன். ஆனால், கல்லூரியில் படிக்கும்போதே நேரடியாக எம்.ஜி.ஆர். மூலம் கட்சிக்கு வந்தேன். அப்படி இருக்கும்போது அவர் இறந்த பிறகு கட்சிக்குள் வந்து நான் தான் அதிமுகவை காப்பாற்றினேன் என்று கூறுகிறார். அந்த தீய சக்தியை வெளியேற்றுங்கள்.