இந்தியாவுடன் யாரும் மோத முடியாது.. ஓவராக சீன் போட்ட சீனாவுக்கு சரியான பதிலடி... பிரதமர் மோடி..!

By vinoth kumarFirst Published Jun 28, 2020, 12:39 PM IST
Highlights

நட்பை பெறுவது எப்படி என்றும் இந்தியாவுக்கு தெரியும், கண்ணுக்கு கண் என்று வந்தால் பதிலடிகொடுக்கவும் தெரியும் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நட்பை பெறுவது எப்படி என்றும் இந்தியாவுக்கு தெரியும், கண்ணுக்கு கண் என்று வந்தால் பதிலடிகொடுக்கவும் தெரியும் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது : நமது எல்லை மற்றும் இறையாண்மையை காப்பதில் இந்தியா கொண்டுள்ள உறுதித்தன்மையை உலகம் பார்த்துள்ளது. லடாக்கில், நமது பகுதியில் அத்துமீறலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. லடாக்கில் வீரமரணம் அடைந்த நமது தைரியமிக்க வீரர்களுக்கு தேசம் தலை வணங்குகிறது. அவர்களின் தியாகம் என்றும் நினைவில் கொள்ளப்படும்.  இந்தியா எப்போதும் தனக்கான பிரச்சினைகளை வாய்ப்புகளாக மாற்றியுள்ளது.உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது.  நட்பை பெறுவது எப்படி என்றும் இந்தியாவுக்கு தெரியும், கண்ணுக்கு கண் என்று வந்தால் பதிலடிகொடுக்கவும் தெரியும். சுய சார்பை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது.  

 கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது. இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது  பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்று நினைக்காதீர்கள். எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020ம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள். ஊரடங்கு முடிந்து சகஜ நிலை திரும்ப நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கும் நிலையில் மிக கவனமுடன் செயல்பட வேண்டும் என்றார். 

மேலும், பேசிய பிரதமர் ஊரடங்கு தளர்வு 2 விஷயங்கள் மிக முக்கியமானவை. கொரோனாவை வீழ்த்தவேண்டும் மற்றொன்று பொருளாதார நடவடிக்கையாகும். முக கவசம் அணிய வில்லை என்றாலோ அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றாலோ உங்கள் உயிரை மட்டுமின்றி மற்றவர்களின் உயிரையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறீர்கள் என்று அர்த்தம். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

கொரோனா வைரஸ் நாம் வாழக்கூடிய சூழ்நிலையை நிச்சயமாக மாற்றியிருக்கிறது. மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவற்றுக்கான தேவை உலக அளவில் அதிகரித்திருக்கிறது. இந்திய பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆரோக்கியமான பூமியை உருவாக்க எல்லா வகையிலும் நாம் நமது பங்களிப்பை வழங்க முடியும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

click me!