AIADMK: அதிமுக தொண்டர்கள் மீது கை வைத்தால் பின்விளைவுகள் வேற மாதிரி இருக்கும்.. திமுக எச்சரிக்கும் ஜெயக்குமார்

By vinoth kumarFirst Published Dec 22, 2021, 1:50 PM IST
Highlights

திமுக ஆட்சியில் எந்த பிரச்சனை வந்தாலும் அதிமுகவை தான் குறை சொல்கிறார்கள். முதல்வர் வீட்டில் சமையல் நடைபெறவில்லை என்றாலும் அதற்கு காரணம் அதிமுகதான் என்கிறார்கள். திமுகவினருக்கு நிதி மேலாண்மை தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் நிதி நெருக்கடியில் இருந்தாலும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினோம். 

அரசு கஜனாவை காலி செய்துவிட்டு செல்வது தான் திமுகவின் வழக்கம். அரசு கஜனாவை நிரப்புவது அதிமுகவின் வழக்கம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ராயபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- திமுக ஆட்சியில் எந்த பிரச்சனை வந்தாலும் அதிமுகவை தான் குறை சொல்கிறார்கள். முதல்வர் வீட்டில் சமையல் நடைபெறவில்லை என்றாலும் அதற்கு காரணம் அதிமுகதான் என்கிறார்கள். திமுகவினருக்கு நிதி மேலாண்மை தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் நிதி நெருக்கடியில் இருந்தாலும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினோம். 

தமிழ்நாட்டில் நடைபெற்று வருவது மன்னர் ஆட்சியா? இல்லை மக்கள் ஆட்சியா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவை எதிர்த்து பேசினால் தாக்குதல் நடத்துகின்றனர். அதிமுக தொண்டர்கள் மீது கை வைத்தால் பின்விளைவுகள் கண்டிப்பாக இருக்கும். அரசு கஜனாவை காலி செய்துவிட்டு செல்வது தான் திமுகவின் வழக்கம். அரசு கஜனாவை நிரப்புவது அதிமுகவின் வழக்கம்.  அதிமுக, திமுக ஆட்சி காலங்களை ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், அதிமுகவாக ஒற்றுமையாக இருப்பதற்கு சசிகலாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை தனது கட்சி வேலையை பார்க்கட்டும். எங்கள் விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. சசிகலாவை கட்சியில் சேர்க்குமாறு அறிவுரை கொடுக்க இவர் யார்? இவர் என்ன எங்களிடம் அட்வைசரா? அவரவர் வேலையை அவரவர் பார்க்கட்டும். பா.ஜ.கவில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கிறார்கள். அது பற்றி நாங்கள் பேசுகிறோமா? சசிகலாவை வேண்டுமானால் பா.ஜ.கவில் சேர்த்துக் கொள்ளட்டும். அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை என்றார் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

click me!