ரூ. 6 கோடி ஒதுக்கிய தமிழக அரசு... தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் திருப்பணி..?

By Thiraviaraj RMFirst Published Dec 16, 2020, 1:16 PM IST
Highlights

தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள திருக்கோவில் திருப்பணிகளுக்காக 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள திருக்கோவில் திருப்பணிகளுக்காக 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2020- 21ஆம் ஆண்டின் திருக்கோவில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்காக 6 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, ராமர் திருக்கோயில் கல்பாடி கல்குளம் வட்டம் கன்னியாகுமரி மாவட்டம், முத்துகிருஷ்ணேஸ்வரர் திருக்கோயில் கயத்தாறு தூத்துக்குடி மாவட்டம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் புள்ளமங்கை தஞ்சாவூர் மாவட்டம், செல்லாண்டி அம்மன் மற்றும் கருப்பண்ண சுவாமி திருக்கோயில் ஆரியூர் அரவக்குறிச்சி வட்டம் கரூர் மாவட்டம்,

காளகத்தீஸ்வரர் திருக்கோயில் கருடமங்கலம் லால்குடி வட்டம் திருச்சி மாவட்டம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ராமநாதபுரம் நகர் இராமநாதபுரம் மாவட்டம், சேது புரீஸ்வரர் திருக்கோயில் வல்ல மங்கலம் தஞ்சாவூர் மாவட்டம், ராமசாமி திருக்கோயில் கரிவலம்வந்தநல்லூர் திருநெல்வேலி மாவட்டம்,

மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில் அக்ராபாளையம் திருவண்ணாமலை மாவட்டம், ஜெயபுரீஸ்வரர் திருக்கோயில் குழுமூர் அரியலூர் மாவட்டம், ஆரணி ஈஸ்வரர் மற்றும் லட்சுமி நாராயண சுவாமி திருக்கோவில் காரிமங்கலம் நகர் தர்மபுரி மாவட்டம், சக்கரபாணி திருக்கோயில் அரசூர் கடலூர் மாவட்டம் ஆகிய கோயில்களின் திருப்பணிகளுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

click me!