ஒலிப்பெருக்கிகளை அகற்றுங்கள்.. இல்லன்னா மசூதிகள் முன் அனுமர் பாடல் பாடுவோம்.. ராஜ் தாக்கரே வெறுப்புப் பேச்சு.

Published : Apr 04, 2022, 04:41 PM IST
ஒலிப்பெருக்கிகளை அகற்றுங்கள்.. இல்லன்னா மசூதிகள் முன் அனுமர் பாடல் பாடுவோம்.. ராஜ் தாக்கரே வெறுப்புப் பேச்சு.

சுருக்கம்

மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றவில்லை என்றால் மசூதிகள் முன் அனுமன்  பாடல்களை பாடுவோம் என ராஜ்தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றவில்லை என்றால் மசூதிகள் முன் அனுமன்  பாடல்களை பாடுவோம் என ராஜ்தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் அகப்பட்டுக் கொள்பவர்களில் ஒருவர்தான் ராஜ் தாக்கரே. அவர் பேசிய பேச்சுக்காக அவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. குறிப்பாக வட இந்தியர்கள் குறித்த அடிக்கடி வன்முறையை தூண்டும் வகையில் அவரது பேச்சுக்கள் இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பேசிய அதுபோன்ற ஒரு பேச்சால் மும்பையில் வன்முறை வெடித்தது. இவர் மீது சமாஜ்வாடி கட்சி பல புகார்களை கொடுத்துள்ளது. ஆனாலும் இவர் இதுவரை அதில் கைது செய்யப்படவில்லை.

எதையுமே, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக்கூடிய அரசியல்வாதியாக ராஜ்தாக்கரே இருந்து வருகிறார். அவரின் பேச்சுகள் தொடர்ந்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த கூடியதாக இருந்து வருகிறது. இதனால் கடந்த 2008ஆம் ஆண்டு இவர் பத்திரிகைகளில் பேசக்கூடாது பேட்டி கொடுக்கக் கூடாது என்று போலீசார் தடை விதித்தனர். ஆனாலும் அடிக்கடி வட இந்தியர்களின் மீது தாக்குதல் நடத்துவது இவரது கட்சியினர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இது தொடர்பாக அத்வானியே இவரை கண்டித்ததுடன், ராஜ் தாக்ரேவின் பேச்சு நாட்டை பிளவு படுத்தும் வகையில் இருப்பதாக எச்சரித்தார். பல அரசியல் கட்சித் தலைவர்கள் ராஜ்தாக்கரேவை வன்மையாக கண்டித்தும் உள்ளனர். உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகளை அவரது கட்சியினர் தாக்கி வருகின்றனர்.

இவருக்கு எதிராக பல புகார்கள் இருந்து வரும்கிறது. இந்நிலையில்தான் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராஜ்தாக்கரே பேசினார். அப்போது முதலமைச்சர் உத்தவ்  தாக்கரேவை அவர் கடுமையாக விமர்சித்தார். தேர்தலுக்கு முன்பாக எந்த கட்சிகளை விமர்சித்து பேசினாரோ, அதையே கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களுக்கு உத்தவ் தாக்கரே துரோகம் செய்து விட்டார் என்று அவர் விமர்சித்தார். மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை உடனே அரசு அகற்ற வேண்டும்  என கோரிக்கை வைத்த அவர், ஏன் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் ஒலிக்கின்றன என கேள்வி எழுப்பினார்.

உடனே ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் மசூதிகளுக்கு எதிரில் அனுமன் பாடல்களைப்  ஒலிக்க விடுவோம் என அவர் எச்சரித்தார். நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல, ஆனால் எனது சொந்த மதத்தை எண்ணி பெருமைப்படுகிறேன் என்றார். மும்பையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் குடிசைகளில் என்ன நடக்கிறது என்று மும்பை போலீசாருக்கு நன்கு தெரியும் என்ற அவர், அப்பகுதிகளில் சோதனை  நடத்த வேண்டும்  என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் கூறினார். பெரும்பாலான எம்எல்ஏக்கள் குடிசைப் பகுதி முஸ்லிம்களை வாக்கு வங்கியாகவே பயன்படுத்துகின்றனர் ஆனால் அவர்களுக்கு ஆதார் கார்டு கூட கிடையாது என்றார்.

நரேந்திர மோடி அவர்கள் தேர்தல் நேரத்தின்போது முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் என்று அழைத்தார் அப்போது உத்தவ் தாக்கரே எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகுதான் அவருக்கு முதல்வர் ஆகும் ஆசை வந்தது என்றார். எம்எல்ஏக்களுக்கு ஏன் பென்சியன் கொடுக்கப்படவேண்டும்? எம்.பிக்களுக்கு ஏன் வீடு தரப்பட வேண்டும் என்ற அவர், அப்படி அவர்களுக்கு வீடு கொடுப்பதாக இருந்தால் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் வீடு கொடுக்க வேண்டும், எம்எல்ஏக்களுக்கு வீடு கொடுத்தால் அவர்களின் பண்ணை வீடுகளை அரசு கையகப்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.  சிவசேனா தொடர்ந்து பாஜகவை எதிர்த்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் தங்களுக்கு ஆதரவாக ஒரு கட்சி தேவை என்பதால் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உடன் சமீபகாலமாக பாஜக நெருக்கம் பாராட்டி வருகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!