சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு.. மத்திய அமைச்சர் வெளியிட்டார்.

By Ezhilarasan BabuFirst Published Feb 2, 2021, 6:46 PM IST
Highlights

10ஆம் வகுப்பு தேர்வுகள் மே 4ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரையிலும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூலை 11-ம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம்  வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ளார். கொரோனா பெருந் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இந்தாண்டு ஜனவரி முதல்  மெல்ல மெல்ல திறக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்கு செல்லாததால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அட்டவணை வெளியிட்டுள்ளார். 10ஆம் வகுப்பு தேர்வுகள் மே 4ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையிலும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூலை 11-ம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

10ஆம் வகுப்பு தேர்வு காலை 10:30 முதல் 1:30 மணி வரை நடைபெற உள்ளது அதேபோல் 12  வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு காலை 10:30 முதல்  1:30 மணி வரை மற்றும் 2:30 முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் அச்சமின்றி தைரியமாக தேர்வு எதிர்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

click me!