Panneerselvam: அடி மேல் அடி.. ஓ.பி.எஸ்சுக்கு முற்றும் நெருக்கடி..!

Published : Nov 26, 2021, 10:48 AM IST
Panneerselvam: அடி மேல் அடி.. ஓ.பி.எஸ்சுக்கு முற்றும் நெருக்கடி..!

சுருக்கம்

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாகவும், சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் சேகர் ரெட்டி மீது சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து, சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். 

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.82.32 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாகவும், சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் சேகர் ரெட்டி மீது சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து, சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். 

இப்போது, சேகர் ரெட்டி வீட்டில் சிவப்பு நிற டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதில், அப்போதைய ஆட்சிப்பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரின் பெயர்களும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெயர்களும் இடம்பெற்று இருந்ததாக வருமானவரித்துறை தரப்பு தெரிவித்தது. இது ஊடகங்களிலும் வெளியானது. ஆனால அதை அப்போது அதிமுக தலைவர்கள் யாரும் மறுக்கவில்லை. 

இந்நிலையில்,  ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமான வரித் துறை சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் கடந்த 2015-16 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.20லட்சமும், 2017-18 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.82.12 கோடியும் வரியாகசெலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. வருமான வரித் துறையின் இந்த நோட்டீஸை ரத்து செய்யவும், மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித் துறையின் நோட்டீஸூக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். அத்துடன் வருமான வரித் துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதிதீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக வருமான வரித் துறை பதில்தர உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..