இல்லதரசிகளுக்கு குஷியான செய்தி... தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு..!

By vinoth kumar  |  First Published Feb 1, 2021, 2:10 PM IST

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதம் ஆகக் குறைக்கப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதம் ஆகக் குறைக்கப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

நாடாளுமன்றத்தில் 2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்  மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில், தங்கம் மற்றும் வெள்ளி விலையை பழைய நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.  தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும் என்றார். தங்கம் இறக்குமதி மீதான வரி 12.5% லிருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

மேலும், பருத்திக்கான இறக்குமதி வரி 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காப்பர் ஸ்கிராப் மீதான சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சில வாகன பாகங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக உயர்த்தப்படும் என்றார். மேலும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2-ம், டீசல் லிட்டருக்கு ரூ.4-க்கும் வேளாண் வரி விதிக்கப்பட்டுள்ளது. 

click me!