ஒலிபெருக்கி (பாங்கு) சத்தத்தை குறையுங்கள்.. மசூதிகளுக்கு காவல் துறை நோட்டீஸ்.. பரபரக்கும் கர்நாடக.

Published : Apr 07, 2022, 04:11 PM IST
ஒலிபெருக்கி (பாங்கு) சத்தத்தை குறையுங்கள்.. மசூதிகளுக்கு காவல் துறை நோட்டீஸ்.. பரபரக்கும் கர்நாடக.

சுருக்கம்

மசூதிகளில் ஒலி பெருக்கி சத்தத்தை குறையுங்கள் என கர்நாடக காவல்துறை அம்மாநில மசூதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மசூதிகளில் ஒலி பெருக்கி சத்தத்தை குறையுங்கள் என கர்நாடக காவல்துறை அம்மாநில மசூதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அங்கு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இஸ்லாமியர்களை குறிவைக்கும் வகையில் அரசு உத்தரவுகள் மற்றும் செயல்பாடுகள் அரங்கேறி வருகிறது. கடந்த மாதம்  பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து அம்மாநிலத்தில் இந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் ஹிஜாப்க்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்தனர், இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்களை குறி வைக்கும் வகையில் கர்நாடக காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மசூதிகளில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த சத்தத்தை குறைக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒலி மாசு ஏற்படுத்தும் வகையிலான கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது என கர்நாடக மாநிலத்தில் உள்ள மசூதிகளுக்கு அம்மாநில காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியது. 

இது தொடர்பாக அம்மாநில காவல்துறை டிஜிபி பிரவீன் சூட் மாநிலத்தின் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார், மத வழிபாட்டுத்தலங்கள், மற்றும் பொது இடங்களில்  ஒலி மாசு ஏற்படுத்தும் வகையிலான ஒலிபெருக்கிகளின் சத்தத்தை குறைக்க வேண்டும், மசூதிகளில் ஒலிக்கும் பாங்கு பொது இடங்களில் ஒலி மாசு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கர்நாடகம் பெங்களூரில் உள்ள 250க்கும் அதிகமான மசூதிகளுக்கு கர்நாதக  மாநில போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளில் சத்தத்தை குறைக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக மசூதிகளில் எழுப்பப்படும் பாங்கு ஒலி மக்களுக்கு தொந்தரவு தருவதாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சில இந்து அமைப்புகள் புகார் தெரிவித்து வந்தனர்.

எனவே அந்த ஸ்பீக்கர் சத்தத்தை குறைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் இந்த நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர் அதேபோல் அம்மாநிலத்தில் ஹிஜாப் உடை, ஹலால் உணவு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்து அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன. பொதுவாக இது போன்ற மதரீதியான சலசலப்புகள் அங்கு தொடர்ந்து ஏற்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே மசூதிகளில் ஒலிபெருக்கியை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில்  கர்நாடக மாநிலம் போலீஸ் பெருஙளூரில் இது போன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் சார்... தில் இருந்தா எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு எங்களோடு தேர்தலில் மோதிப்பாருங்கள்..! ஆதவ் சவால்..!
உங்களால பலபேர் இறந்திருக்கிறார்கள்... புதுவை மாநாட்டில் புஸ்ஸி ஆனந்திடம் சீறிய பெண் காவல் அதிகாரி