பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்... அசராமல் திருப்பி அடிக்கும் முதல்வர் நாராயணசாமி..!

Published : Feb 16, 2021, 03:36 PM IST
பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்...  அசராமல் திருப்பி அடிக்கும் முதல்வர் நாராயணசாமி..!

சுருக்கம்

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 

புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில், இன்று மற்றொரு எம்எல்ஏவான ஜான்குமார் ராஜினாமா செய்தார். 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் தற்போதைய நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து, அமைச்சர் கந்தசாமி புதுச்சேரி ஆளுங்கட்சி அமைச்சரவை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறினார். இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது. புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது. இந்திய அரசியல் சாசன சட்டப்படி புதுச்சேரி அரசு செயல்படும் என்றார்

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!
பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!