நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் லிஸ்ட் ரெடி !! அட்சித்தூக்கும் தினகரன் !!

By Selvanayagam PFirst Published Jan 30, 2019, 6:38 AM IST
Highlights

வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்ட் ரெடியாக உள்ளது என்றும், வெகு விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விடுவோம் என்றும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில பேசும்போது,  தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.

கரூர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, சென்னையில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை, நீதிபதி சாந்தி முன், நடந்தது.

 

இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் ஆஜரானார். அரசு தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் காயத்ரி வாதாடினார். தினகரன் தரப்பில், வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் ஆஜரானார்.இதையடுத்து, பிப்., 4க்கு, வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  தினகரன் , என் மீது போடப்பட்ட வழக்கை, சட்டப்படி சந்திப்பேன் என தெரிவித்தார். ஜாக்டோ -- ஜியோ' போராட்ட விவகாரத்தில், அதிகார மமதையில், தமிழக அரசு செயல்படக் கூடாது என்றும் . 95 சதவீத ஆசிரியர்கள், பணிக்கு திரும்பியதாக அரசு பொள் சொல்லுவதாகவும் தெரிவித்தார்.

ஆளும், அதிமுகவுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிகூட கிடைக்காது என்றும் அந்த கட்சிக்கு  டிபாசிட் கூட கிடைக்காது என்றும் தினகரன் தெரிவித்தார்.

அமமுக  சார்பில், ஆறு மாதத்துக்கு முன்னரே, தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். என்றும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்ட் ரெடி என்றும் தெரிவித்த தினகரன் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

click me!