முடிஞ்சா முதியோர் உதவியை கொடுங்க.? திமுகவை அட்டாக் செய்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

By Raghupati RFirst Published Dec 13, 2021, 7:30 AM IST
Highlights

திமுக தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித்தொகை  1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறி இருந்தார்கள்,முதலில் இதை செய்யட்டும் என்று திமுகவை அட்டாக் செய்து இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் உட்கட்சித் தேர்தல் வருகின்ற 13, 14 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் உள்ள குண்ணத்தூர் அம்மா கோவிலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ஆர்.பி.உதயகுமார், ‘உட்கட்சி தேர்தலை அதிமுகதான் ஜனநாயக முறையில் நடத்துகிறது. தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒபிஎஸ் அவர்களையும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இபிஎஸ் அவர்களையும் ஜனநாயக முறைப்படி கழகத் தொண்டர்கள் தேர்வு செய்தனர். குறிப்பாக 200 நிர்வாகிகளும் மனு தாக்கல் செய்திருந்தனர். அனைவரும் ஓபிஎஸ் இபிஎஸ் இருவருக்கும் கட்டணம் செலுத்தி இருவர் கரத்தை வலுப்படுத்தி ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தினர். தற்போது திமுக அரசு நிலைதடுமாறி அரசாக தட்டுத்தடுமாறி ஆட்சி நடத்துகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தவறியதால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். திமுக அரசு எந்த திட்டமும் செய்யவில்லை மாறாக முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அதை திரும்பவும் கொடுத்து வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் 35 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வு தொகை தரப்பட்டது கடந்த திமுக தேர்தல் அறிக்கையில் 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினர்கள். தற்போது திமுக கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். வரும் காலங்களில் திமுகவில் மாயத்தோற்றத்தை மக்களிடத்தில் தோலுரித்து காட்ட வேண்டும். வெற்றி தோல்வி என்பது வீரனுக்கு அழகல்ல எதிர்காலத்தில் தமிழகத்தை ஆளக்கூடிய தகுதியுள்ள ஒரே இயக்கம் அதிமுக தான் என்று பேசினார்.

click me!