தமிழக அரசு ஏன் இந்து கோவில்கள் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது, இதையே தேவாலயத்தில் காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் எச்.ராஜா.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில், தேசிய ஊடகவியலாளர்கள் நலச்சங்கத்தின் 2 வது மாநில மாநாடு, நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பாரதிய ஜனதா கட்சியின் எச்.ராஜா. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறாமல், காட்டாட்சி நடைபெற்று வருகின்றது. கோவையில் கொல்ல பட்ட இந்து முன்னணி சசிகுமார் கொலையை கூட தமிழக அரசின் காவல் துறை கண்டுபிடிக்கவில்லை. சிபிஐ அதிகாரிகள் வந்து கண்டுபிடித்தது.
undefined
தமிழகத்தில் கருத்து சுதந்திரம் பறிக்க பட்டு வருகின்றது. உதாரணமாக தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மேக தாது குறித்து பொராட்டத்தில் ஈடுபட்ட பொழுது தங்களின் மீது வழக்கு பதிவு செய்யபட்டது. கொரோனா தொற்றை பரப்பி விட்டதாக கூறி வழக்கு போட்டார்கள். ஆனால், நேற்று சேலத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டத்தின் மூலமாக கொரோனா பரவாதா ? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், சிதம்பரத்தில் கடந்த 20 தேதி ஆருத்ரா தரிசனம், நடைபெற இருந்த நிலையில் அரசு கொரோனா தொற்று காரணமாக தடை விதிக்கப்பட்டது. ஆனால், நேற்று சேலத்தில் ஸ்டாலினை தரிசனம் செய்ய 200 ருபாய் பணமும், பிரியாணியும் வழங்கப்பட்டது அப்பொழுது கொரோனா பரவாதா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தற்பொழுது தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருக்கோவில் தங்கத்தை உருக்க வேண்டும் அதனை பிஸ்கட் ஆக்க வேண்டும், என்று கூறிவருகின்றார். பிஸ்கட் ஆக்கினால் தான் அதனை சாப்பிட முடியும் என்று நினைக்கிறாறோ என்று தெரியவில்லை. தமிழக அரசுக்கு இந்து கோவில்கள் மீது இவ்வளவு தீவிரம் காட்டும் போது, டிசம்பர் மாதம் 25 ம்தேதி கிறிஸ்துமஸ், தினத்தன்று தேவாலயத்தை தவிர வேறு, யாரும் வரகூடாது என்று அறிவிக்க முடியுமா அதற்க்கு திராணி உள்ளதா என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.