சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கும் ஸ்டாலின்.!நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்-ஆர்பி உதயகுமார்

By Ajmal KhanFirst Published Dec 1, 2022, 10:28 AM IST
Highlights

எதிர்கட்சிதலைவர் எடப்பாடியாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருப்பது அவர் வகிக்கும் பதவியின் இலக்கணத்தை இழந்துவிட்டார் என தெரிவித்துள்ள ஆர்.பி.உதயகுமார் ஜனநாயகத்தை மறந்து விட்டு சர்வாதிகார போக்கை கடைபிடித்து வரும் திமுகவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்என கூறியுள்ளார். 

சர்வாதிகாரியாக செயல்படும் ஸ்டாலின்

சர்வாதிகார போக்குடன்  செயல்படும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஸ்டாலின் அரசு  விழாவிலேயே பேசிய போது, நாங்கள் விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல , விமர்சனங்களை வரவேற்கிறேன், விஷமத்தனம் கூடாது ,விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை இருக்க வேண்டும். கையிலே ஆட்சி இருந்த போது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு,

இன்று உலக மகா உத்தமனை போல பேசுபவர்களுக்கு, விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை என்று பேசி இருப்பது,  முதலமைச்சர் பதவி வைக்கின்ற அந்த பதவிக்கு ஒரு இலக்கணமாக ஒரு தகுதியாக இல்லை. மரபு மீறிய லட்சுமணன் கோட்டை தாண்டிய பேச்சாக முதலமைச்சருடைய பேச்சு அடைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு தகுதி என்பது முதலமைச்சர் நிர்ணயிப்பது அல்ல, 

திமுக அரசுக்கு எதிராக மக்கள் கோபத்தில் கொந்தளித்து வயிறு எரிகின்றனர்.. ஸ்டாலினுக்கு சவால் விடும் இபிஎஸ்.!

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா.?

நாட்டு மக்கள் தங்கள் வாக்குரிமை மூலமாக  தேர்ந்தெடுக்கப்பட்டு ,அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தான், முதலமைச்சரும் உருவாகிறார், எதிர்க்கட்சித் தலைவரும் உருவாகிறார். உங்களை போல் தந்தையின் கரம்பிடித்து, அரசியல் களத்திற்கு வந்தவர்அல்ல எடப்பாடியார், தன்னுடைய உழைப்பால்  உயர்ந்தவர். எடப்பாடியார் ஒரு சவால் கொடுத்திருக்கிறார், அதில் கடந்த பத்தாண்டு  அம்மாவுடைய அரசு  செய்திருக்கிற  திட்டங்களால் மக்கள் பெற்றிருக்கிற பயன்களை நேருக்கு நேராக விவாதிக்க தயார், ஆனால்  கடந்த 19 மாதங்களிலே இந்த நாட்டு மக்களுக்கு என்ன திட்டங்களை திமுக அரசு கொடுத்திருக்கிறீர்களோ அந்த திட்டங்களுக்கான பயன்கள் என்ன, இந்த மக்களுக்கு சேர்ந்திருக்கிறதோ அதை விவாதிக்க தயாரா ,என்று  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கேள்வி கேட்டிருக்கிறார், நாங்களும் சட்டமன்றத்தில் இருந்து உங்களுடைய நடவடிக்கைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம் 

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் வரி விதித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது... செல்லூர் ராஜூ விமர்சனம்!!

அதிமுக திட்டங்களை தொடங்கும் ஸ்டாலின்

நீங்கள் அதை செய்வோம் எதை செய்வோம் என்று 505 தேர்தல் வாக்குறுதிகள் தந்தீர்கள், அதுமட்டும் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறபோது மின்சார கட்டண உயர்வு சாக்கடிக்கிறது என்று சொன்னீர்கள்,இப்போது மின்சார கட்டணம் உங்களுக்கு சாக்கடிக்கவில்லையா? அதேபோல டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உங்கள் வீட்டுக்கு முன்பாக நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள், இன்றைக்கு டாஸ்மாக் பார்கள் நாடெங்கும் இன்றைக்கு திறந்து இருப்பது உங்கள் கவனத்திற்கு வந்ததா வரவில்லையா? அதேபோன்று19 மாதங்களிலே 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள், பட்ஜெட் உரையில் அறிவித்த திட்டங்கள், மானிய கோரிக்கை அறிவித்த திட்டங்கள், இவையெல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எடப்பாடியார் அறிவித்த திட்டங்களைத் தான் இன்றைக்கு  நீங்கள் (ஸ்டாலின்) ரிப்பன் வெட்டி திறக்கிறீர்கள். 

 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்

மக்கள் பிரச்சனைகள்  எதிர்க்கட்சித்தலைவர் வாயிலாக தான் தெரிந்து கொள்ள முடியும். என்கிற அந்த ஜனநாயகம் மாண்பை முழுமையாக கற்றறிந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் எடப்பாடியார் கேட்ட கேள்விக்கு  மாண்புகளை மறைத்த மர்மம் என்ன என்பதுதான் இன்றைய எதார்த்தமான கேள்வி இந்த நிலையிலே நீங்கள் சென்றீர்கள் என்றால் மக்கள் உங்களுக்கு எப்படி பாட புகட்டுவார்கள் என்பதை வருகிற பாராளுமன்ற தேர்தல் அதற்கு விடையாக அமையும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பால் பேராபத்து.. தகவல்கள் திருடப்படக்கூடிய அபாயம்.. பகீர் கிளப்பும் சீமான்..!

click me!