சென்னைக்கு காட்டும் அக்கறை மதுரைக்கும் காட்ட வேண்டும்- ஸ்டாலினை சீண்டும் ஆர்பி உதயகுமார்

By Ajmal Khan  |  First Published Oct 4, 2022, 10:10 AM IST

மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக உயர்த்திட எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக அரசு விரைவுப்படுத்துமா, கிடப்பில் போடப்படுமா.? என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 
 


மதுரையில் சர்வதேச விமான நிலையம்

மதுரை சர்வதேச விமான நிலையமாக மாற்ற தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உருவாக்கிட மத்திய அரசு 550 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது, அந்த விமான நிலைய விரிவாக்கத்திற்கு 633.17 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.  இதில் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் ஆட்சியில், அயன்பாப்பாக்குடி, குசவன்குண்டு, பாப்பானோடை, ராமன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டா நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் என 528.65 நிலங்களை முழுமையாக ஒப்படைக்கப்பட்டது,

Tap to resize

Latest Videos

குறிப்பாக 90 சதவீதம் அளவில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 104.52 ஏக்கர் நிலங்களை நிலங்களை திமுக அரசு துரிதப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனா காலகட்டத்தின் போது நிலம் எடுக்கும் பணி தாமதமானது, தற்போது சகஜமாக நிலை திரும்பிவிட்டது, மத்திய அரசுக்கு எதிர்பார்க்கும் வகையில் திமுக அரசு ஒத்துழைப்பு கொடுக்க முன்வர வேண்டும். சென்னையில் புதிதாக உருவாக்கப்படும் விமான நிலையத்திற்கு காட்டும் அக்கறை மதுரைக்கு காட்ட வேண்டும், 

தேவர் சிலை தங்க கவசம் யாருக்கு..? ஓபிஎஸ்ம் இல்லை, இபிஎஸ்ம் இல்லை..! புதிய முடிவு எடுக்கும் வங்கி நிர்வாகம்

மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

மதுரை மாவட்டம் தொழில் வளர்ச்சியின் பின்தங்கி மாவட்டமாக உள்ளது, தற்போது சுற்றுலா மாவட்டமாக உள்ளது, இந்த புதிய பன்னாட்டு விமான நிலையத்தின் மூலம் தொழில் வளர்ச்சி,விவசாய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி ஆகியவை உருவாகும். ஏற்கனவே சர்வதேச விமான நிலையம் உருவாவதற்கு ரிங் ரோடு பகுதியில் 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உள்ள தேவையாகும், அப்படி அந்த நிலத்தை எடுக்கும் பட்சத்தில் வாகனங்கள் ஒன்பது கிலோமீட்டர் சுற்றி செல்லும் சூழ்நிலை ஏற்படும்,  அதனால் அண்டர் பாஸ் திட்டத்தை செயல்படுத்தப்பட்டது, 

இதற்காக எடப்பாடியார் ஆட்சி காலத்தில் இதற்காக என்.ஒ.சி.வழங்கப்பட்டது அண்டர்பாஸ் திட்டம் மைசூர், வாரணாசியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது ,அதனை தொடர்ந்து தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் செயல்பட உள்ளது. ஆகவே மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக உயர்த்திட, எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக அரசு விரைவுப்படுத்துமா, கிடப்பில் போடுமா என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர.பி.உதயகுமார் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படியுங்கள்

மணல் கொள்ளையர்களால் கொள்ளிடத்தில் தொடரும் உயிர் பலி...! திமுக அரசே பொறுப்பு- அண்ணாமலை ஆவேசம்

 

click me!