24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக்..! அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுவது ஏன் ..! ஆர்.பி.உதயகுமார் கேள்வி

By Ajmal Khan  |  First Published Nov 29, 2022, 10:47 AM IST

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் 500 டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டன. இன்றைக்கு கணக்கில் அடங்காத பெட்டிக்கடை போல், மதுபான கடைகள் நாடெங்கும் இன்றைக்கு திறக்கப்பட்டு இருக்கிறது, இதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று தெரியவில்லையென ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.


24 மணி நேரமும் டாஸ்மாக்

தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலே சட்ட விரோதமாக போதை பொருள் தடுப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிற சூழ்நிலையிலே, அதைவிட இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதை நாம் பார்க்கிறபோது, இந்த நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை தான் இந்த நாட்டு மக்கள் கேள்விக்குறி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். சங்க வைத்து தமிழ் வளர்த்த இந்த தாய் திருநாடு, பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடும்மிக்க இந்த தாய் தமிழ் இனம், இன்றைக்கு டாஸ்மாக் கடைகளிலே 24 மணி நேரமும் அங்கே காத்துக் கிடக்கிற அவலநிலை,

Tap to resize

Latest Videos

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க கட்டணமா.? அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த மின்வாரியம்

 இன்றைக்கு  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள நீதியரசர்களே கேள்வி எழுப்பி உள்ளார்கள், டாஸ்மாக் கடையினுடைய நேரம் பொதுவாக 12 முதல் 10 மணி வரை என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட,இன்றைக்கு 24 மணி நேரமும் செயல்படுகிறது, அது மட்டுமல்ல டாஸ்மாக் கடையில் விலை பட்டியலே கிடையாது, அந்த மதுபானங்களுக்கு விலை கூடுதலாக விற்கப்படுகிறது யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சட்டப்படி மது விற்பனை செய்யக்கூடாது என்ற அறிவுறுத்தல் செய்யப்படுகிறதா, டாஸ்மாக் கடைகள் 2 மணி முதல்8 மணி வரை செயல்பட பல்வேறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு நீதியரசர்கள் பட்டவர்த்தமாக, வெட்ட வெளிச்சமாக திமுக அரசை தோலுரித்துக் காட்டியுள்ளார்கள்.  

ஆளுங்கட்சிக்கு எதிரான பேச்சு..! வாட்ஸ் அப் கால் ஒட்டுக்கேட்குறாங்க..? பரபரப்பு புகார் கூறிய சவுக்கு சங்கர்

மது விற்பனையில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னணியில் உள்ளது. கடைகள் செயல்படும் நேரத்தை மேலும் குறைத்தால் என்ன என்று இந்த அரசுக்கு பகிரங்கமாக நீதியரசர்கள் கேள்வி கேட்டிருக்கிறது என்பது இந்த அரசுக்கு தலைகுனிவு ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களுக்கு மது விற்பனை முற்றிலும் தடை செய்யப்படவில்லையா என்கிற ஆச்சரியமாக கேள்வி கேட்டிருக்கிறார்கள்.டாஸ்மாக் நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க அரசு முன்வருமா என்று நீதியரசர்கள் இன்றைக்கு கேள்வி கேட்டிருக்கிறார்கள். பாலாறு, தேனாறு ஓடிய  தமிழ்நாட்டில், டாஸ்மாக் பார்கள் ஓடுகிற ஒரு அவல நிலையை உள்ளது .பிள்ளைகளுக்கு மடிக்கணிணி கொடுத்து, கணினி புரட்சி ஏற்படுத்தி, வல்லரசு நாடுகளுக்கு இணையாக  தமிழகத்தில் மாணவர்களை அறிவு ஆற்றல் மிகுந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கிய திட்டம் தந்த அம்மா, 500 டாஸ்மார்க் கடைகளை மூடினார்கள்,

அதனை எடப்பாடியார் காலத்தில் 500 டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டன. இன்றைக்கு கணக்கில் அடங்காத பெட்டிக்கடை போல், மதுபான கடைகள் நாடெங்கும் இன்றைக்கு திறக்கப்பட்டு இருக்கிறது, இதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று தெரியவில்லை.மாவட்ட நிர்வாகத்தினுடைய எண்ணிக்கைக்கும், செயல்படுகிற மதுபான கடைகளுடைய எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.  அரசு அதிகாரம் இல்லாமல், புற வழியில் அதிகாரத்தை இதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று கேள்வி இன்றைக்கு மக்கள் மத்தியில் விவாதத்தில் இருக்கிறது.

சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியல் நடத்தி வரும் மோடி அரசு.. இது அநியாயமான தாக்குதல்.. கொதிக்கும் வைகோ.!

நாடெங்கும் கல்விச்சாலைகள் செய்வோம் என்று சொன்ன இந்த தாய் தமிழ் நாட்டிலே, இன்றைக்கு பார்சாலைகளாக தமிழ்நாட்டுச் சாலைகள் மாறி இருப்பது வேதனையின் உச்சமாகும்.இளைய சமுதாயத்தை காப்பதற்கு நீதியரசர்கள் முன் வைத்திருக்கிற கேள்விகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு முன்வருமா என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். 

இதையும் படியுங்கள்

இதை செயல்படுத்த வேண்டாம், கைவிடுக..! ஸ்டாலினுக்கு அவசர கடிதம் எழுதிய கே. பாலகிருஷ்ணன்

click me!