பாஜகவுக்கு தாவுகிறாரா ரவீந்திரநாத்... பொங்கியெழுந்த ஓ.பி.எஸ் மகன்..!

By Thiraviaraj RMFirst Published Jun 7, 2019, 3:13 PM IST
Highlights

தமிழகத்தில் 37 இடங்களில் தோல்வியை தழுவிய அதிமுக கூட்டணியில் ஒரே வெற்றி வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரன் மட்டுமே. அதனாலோ என்னவோ இப்போது அவர் மீது மட்டுமே வதந்திகள் வட்டமடிக்க தொடங்கி வருகின்றன. 
 

தமிழகத்தில் 37 இடங்களில் தோல்வியை தழுவிய அதிமுக கூட்டணியில் ஒரே வெற்றி வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரன் மட்டுமே. அதனாலோ என்னவோ இப்போது அவர் மீது மட்டுமே வதந்திகள் வட்டமடிக்க தொடங்கி வருகின்றன. 

தேர்தல் முடிவுகளுக்கு முன்பே அசர் செய்த சில வேலைகள் அவரை சர்ச்சைக்குறியவராக மாற்றி விட்டது. அதாவது குச்சனூரில் உள்ள கோயில் கல்வெட்டில் ரிசல்டுக்கு முன்பே எம்.பி என பெயர் பொறிக்கப்பட்டது. அடுத்து மத்திய அமைச்சர்களை அறிவிக்கும் முன்பே ‘ மத்திய அமைச்சரே வருக’ என வால்போஸ்டர்கள் அடித்து ஒட்டி விட்டனர் அவரது ஆதரவாளர்கள். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பங்கேற்க ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடப்பட்டது என்று கூறப்பட்டது. 

ஆனால், இறுதியில் அவர் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இதற்கு காரணமாக அதிமுக உள்கட்சியில் அவருக்கு அமைச்சரவை பதவி கொடுக்க பலத்த எதிர்ப்பு என்று கூறப்பட்டது. அதிமுகவின் மூத்த தலைவரான வைத்தியலிங்கம் மற்றும் மூத்த தலைவர்கள் சிலர் அமைச்சரவை கேட்டு அதிமுக தலைமைக்கு இடஞ்சல் கொடுத்ததாக கூறப்பட்டது. இதனால் யாருக்கும் அதிமுகவில் அமைச்சரவை வேண்டாம் என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்த மாதம் மாநிலங்களவையில் இருந்து அதிமுகவுக்கு 3 இடங்கள் காலியாகிறது. அதில் ஒரு இடத்தை பாஜக கேட்பதாக தகவல் வெளியானது. அந்த ஒரு இடம் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் ஜெய்சங்கருக்கு என்று கூறப்படுகிறது. ஆனால், அவர் குஜராத்தில் இருந்து தேர்வு செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற முடியாத ரவீந்திரநாத் சோகத்தில் இருப்பதாகவும், விரைவில் அவர் பாஜகவில்
இணைய இருப்பதாகவும் செய்தி வெளியாகின. இதுகுறித்து ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரவாளர்களிடம் பேசினால், ‘’அதிமுக என்கிற பெரிய கட்சியில் அவரது தந்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவர் பாஜகவில் இணையப்போவதாக கூறுவதில் எந்தவித லாஜிக்கும் இல்லை. ஓ.பி.எஸ்ஸையே பாஜகவின் இணையப்போவதாக வதந்திகளை சில நாட்களுக்கு முன் கிளப்பி விட்டனர். ஓ.பி.ரவீந்த்திரநாத் பெற்ற வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத எதிர்கட்சியினரும், எதிரிகளும் இப்படி வதந்திகளை கிளப்பி விடுகின்றனர். 

முதன்முறையாக நாடாளுமன்றம் செல்ல இருக்கும் ஓ.பி.ஆர் மீது இனியும் தேவையற்ற வதந்திகளை கிளப்பவேண்டாம். போதும் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்கின்றனர் ஓ.பி.ரச்வீந்திரனின் ஆதரவாளர்கள்.
 

click me!