பொருளாதார மந்த நிலையா ? யார் சொன்னது ? ஒரே நாளில் 3 சினிமா 120 கோடி வசூல் பண்ணியிருக்கு தெரியுமா…மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்து !!

By Selvanayagam PFirst Published Oct 12, 2019, 10:26 PM IST
Highlights

அக்டோபர் 2 ஆம் தேதி வெளியான 3 திரைப்படங்கள் ரூ.120 கோடி வருவாயை ஈட்டியுள்ளதால் நாட்டில் பொருளாதார மந்தநிலை என்பது இல்லை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

மும்பையில்  சட்டமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பொருளாதார மந்தநிலையில் குறித்து கேள்வி எழுப்பினர். 

இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த ரவிசங்கர் பிரசாத், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 ஆம் தேதி வெளியான 3 திரைப்படங்கள் ரூ.120 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாகவும், இது 3 திரைப்படங்களின் சாதனை என திரைப்பட வர்த்தக ஆய்வாளர் கோமல் நக்தா தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் எப்படி மந்தநிலையில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள் என பதில் கேள்வி எழுப்பினார்.

பொருளாதாரம் மந்தநிலையில் இருந்திருந்தால் ஒரு நாளில் ரூ.120 கோடி வருவாயை ஈட்டியிருக்கிறது. எனவே, பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை. போதுமான நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

சமீபத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாத காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்தது. பொருளாதார மந்தநிலையை சரிசெய்வதர்காக அரசு பல்வேறு துறைசார்ந்த தீர்வுகளை வழங்கி வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்த நிலையில், கடந்த வாரம் வெளியான திரைப்பட வசூலை வைத்து நாட்டில் பொருளாதார மந்தநிலை என்பதே இல்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

click me!