சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.,க்களையே தக்கவைக்க முடியவில்லை... நாராயணசாமியை நையாண்டி செய்யும் ரங்கசாமி..!

By Thiraviaraj RMFirst Published Feb 22, 2021, 11:52 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சியால் அவர்களது எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்கமுடியவில்லை என என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்தார்.
 

காங்கிரஸ் கட்சியால் அவர்களது எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்கமுடியவில்லை என என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார். முதல்வர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேறிய நிலையில் சபாநாயகர் அறிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துப் பேசிய முதல்வர் நாராயணசாமி பேரவையில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, “சட்டப்பேரவையில் பேசிய முதலைமைச்சர் நாராயணசாமி வாக்குறுதிகள் குறித்து பேசாமல் ஆளும் மத்திய அரசை குறை கூறி பேசியிருக்கிறார். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது? அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் செயல்படுத்தவில்லை. அரசு சரியாக செயல்படாததால் அவர்களின் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

பெரும்பான்மை குறைந்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். அது எங்களுடைய கடமை. என்னுடைய ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட பாலங்களை இப்போது திறந்துள்ளனர். ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து பேசியே காலம் ஓடிவிட்டது. காங்கிரஸ் கட்சியால் அவர்களது எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்கமுடியவில்லை.” எனத் தெரிவித்தார்.

click me!