இன்னும் 4 வருஷத்துல வானளாவிய அளவில் மிக பிரமாண்ட ராமர் கோவில் !! அமித்ஷா அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Dec 16, 2019, 9:40 PM IST
Highlights

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்கிற 100  ஆண்டு கால  இந்துக்களின் நம்பிக்கை நனவாக போகிறது. எண்ணி 4 ஆண்டுகளில் விண்ணை தொடும் அளவுக்கு பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்படும்' என பாஜக தலைவர் அமித்ஷா அதிரடியாக தெரிவித்தார்.

ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று நான்காம்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் ஐந்தாம்கட்ட தேர்தலை சந்திக்கவுள்ள பகுதிகளில் பாஜக தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

பாக்கூர் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அமித் ஷா, காஷ்மீர் விவகாரம் பற்றி ஜார்கண்டில் பேசிவரும் ராகுல் காந்தி மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தார். இந்தியாவின் ஒன்றிணைந்த பகுதியாக தற்போது காஷ்மீர் இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. எனவே, இன்னும்  4 மாதங்களுக்குள் அயோத்தியில்  ராமருக்கு வானளாவிய அளவில் பிரமாண்டமான கோவில் கட்டப்படும் எனவுன் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்

2014 தேர்தலின் போதே ராமர் கோவில் கட்டுவதை தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவே பாஜக பரப்புரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!