ஏம்ப்பா என்னை யாருமே பாராட்ட மாட்டீங்கிறீங்க !! உங்களுக்கு மனசே வராதா ? புலம்பித் தள்ளிய ராமதாஸ் !!

By Selvanayagam PFirst Published Sep 23, 2019, 8:48 AM IST
Highlights

பாமகவோட கொள்கைகளில் என்ன குறையிருக்கு ? மக்களுக்கு நான் நன்மைதானே செய்றேன்… அப்புறம் ஏன் என்னை யாருமே பாராட்ட மாட்டேங்கிறாங்க என பாமக ராமதாஸ் புலம்பித் தள்ளியுள்ளார்.

பாமக ராமதாஸ் தனது 80-வயதை  பூர்த்தி செய்துள்ளதால் அவருக்கு பாமக நிர்வாகிகள் முத்துவிழா நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் அவருக்கு முத்துவிழா நடைபெற்றது.

அப்போது பேசிய  ராமதாஸ் சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். அரசியலில் பல்வேறு படிகளை கடந்து வந்துள்ள நான், இதுவரை எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை எனத் தெரிவித்தார். பாமகவின் கனவை நான் சொல்லி புரியவைக்கத் தேவையில்லை, தமிழ்ச் சமூகம் என் பின்னால் வர மறுப்பதற்கு என்ன காரணம் என எனக்கு புதெரியவில்லை என குறிப்பிட்டார்.

பாமக  கொள்கைகளில் என்ன குறை இருக்கிறது என மேடை அமைத்தாவது கூறுங்கள் என பல முறை தெரிவித்துவிட்டேன், என் மீது தவறுகள் இருந்தாலோ அல்லது கொள்கைகளில் குறைகள் இருந்தாலோ திருத்திக்கொள்வதாகவும் கூறிவிட்டேன், ஆனால் இதுவரை யாரும் அப்படி எதுவும் கூறவில்லை என புலம்பினார்.

தனது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் எந்தப் பதவியையும் தேடிச்செல்லாமல் எளியவனாக மட்டுமே இருந்து வந்தாலும்,  தமிழ்ச்சமூகத்துக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தாலும்  தன்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

click me!