காஷ்மீர் பிரச்சனை உருவாவதற்கு காரணமே இவர்தாங்க ! அதிரடியாக பேசிய அமித்ஷா !!

By Selvanayagam PFirst Published Sep 23, 2019, 7:58 AM IST
Highlights

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக காரணம் என மத்திய மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.
 

மகாராஷ்ட்ரா  சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று மும்பை வந்த பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கட்சிக்காக பிரசாரம் செய்தார். 

அப்போது பேசிய அவர், நான் பாஜக தொண்டர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை அகற்றியதுடன் நமது பணி முடிந்துவிடவில்லை. நமது பணி தற்போது தான் தொடங்குகிறது. தேசியவாதம் மற்றும் முன்னேற்றத்தின் அத்தியாயத்தில் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே நமது இலக்காகும் என தெரிவித்தார்.
.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் 370 மற்றும் 35 (ஏ) பிரிவுகளை நீக்கிய விவாதத்துடன் மகாராஷ்ட்ரா தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக காங்கிரஸ் பார்க்கிறது. ஆனால் நாங்கள் அதை அப்படி பார்க்கவில்லை.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு திடீரென பாகிஸ்தானுடன் தவறான நேரத்தில் போர் நிறுத்தம் அறிவிக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது. 

இது நேரு செய்த மிகப்பெரிய தவறாகும். காஷ்மீர் பிரச்சினையை நேருவுக்கு பதிலாக சர்தார் வல்லபாய் பட்டேல் கையாண்டிருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த பிரச்சினை ஐ.நா. வரை போக நேரு காரணமாக அமைந்துவிட்டார்.

1950-ல் சர்தார் வல்லபாய் பட்டேல் இறந்த பிறகு, ஷேக் அப்துல்லாவுடன் டெல்லி ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. இதுவே 370-வது பிரிவின் அடித்தளமாக அமைந்தது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த மன்மோகன் சிங் மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகிய இருவரும் பிரதமர் ஆனார்கள். எல்.கே.அத்வானி துணை பிரதமர் ஆனார். ஆனால் பிற மாநிலங்களில் இருந்து காஷ்மீர் சென்றவர்களுக்கு 370-வது பிரிவு நீக்கப்படும் வரை ஒருபோதும் வாக்குரிமை வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

click me!