நாங்குநேரி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்... நடிகை குஷ்புவை களமிறக்க காங்கிரஸ் திட்டம்..?

By vinoth kumarFirst Published Sep 22, 2019, 6:02 PM IST
Highlights

நாங்குநேரியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ்பாண்டியன், பிரபாகரன், பாப்புலர் முத்தையா உள்ளிட்டவர் விரும்பவம் தெரிவித்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.  இதனிடையே, குஷ்பு இந்தத் தொகுயில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை குஷ்புவை களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கன்னியாகுமரி தொகுதியில் எம்.பி.யாக வெற்றி பெற்ற வசந்தகுமார், தனது நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானதால் அந்த தொகுதியும் காலியானது. இந்நிலையில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. 

இந்த 2 தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குகிறது. 30-ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்தது. வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குவதால் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

ஆளும்கட்சியான அ.தி.மு.க. இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் நாங்குநேரியில் போட்டியிடுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க-தி.மு.க. கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதேபோல், நாங்குநேரியில் காங்கிரஸ்- அதிமுக இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், நாங்குநேரியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ்பாண்டியன், பிரபாகரன், பாப்புலர் முத்தையா உள்ளிட்டவர் விரும்பவம் தெரிவித்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.  இதனிடையே, குஷ்பு இந்தத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் சீட் கொடுக்காததால் இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படலாம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி தவறு பட்சத்தில் மூத்த தலைவர் குமரி அனந்தனை களமிறக்கலாம் என்று கூறப்படுகிறது. 

click me!