சிங்கப்பூர், மலேசியா போல தமிழகத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன... சரவெடி கொளுத்தும் திண்டுக்கல் சீனிவாசன்

Published : Sep 22, 2019, 05:44 PM ISTUpdated : Sep 23, 2019, 10:15 AM IST
சிங்கப்பூர், மலேசியா போல தமிழகத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன... சரவெடி கொளுத்தும் திண்டுக்கல் சீனிவாசன்

சுருக்கம்

தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பண பலன்கள் வழங்கும் விழா மதுரையில் நடந்தது. 

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ளது போல தமிழகத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன என  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பண பலன்கள் வழங்கும் விழா மதுரையில் நடந்தது. 

இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்; ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார், அதை மிஞ்சும் வகையில் தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர் பல சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நம்ம முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.1093 கோடியை ஒரே தவணையில் வழங்கி உள்ளார். அதுமட்டுமல்ல வேட்டை தடுப்பு காவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கியுள்ளார்.

அதிமுக இயக்கத்தை அசைத்து விடலாம் என பல பேர் நினைச்சாங்க, டீக்கடை நடத்தியவருக்கும், விவசாயம் செஞ்சவருக்கும் என்ன தெரியும்ன்னு கடுமையா விமசனம் பண்ணாங்க, மண்ணை அள்ளிய விவசாயியும், கடின உழைப்பால் உயர்ந்தவரும் இரட்டை குழல் துப்பாக்கிப்போல் முதல்வர், துணை முதல்வராக செயல்பட்டு வருகின்றனர். 

இன்னும் 21 ஆண்டுகள் ஆனாலும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசுதான் தமிழகத்தில் நடைபெறும். சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ளது போல தமிழகத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்தில் புரட்சி செய்தவர் நமது முதல்வர் எடப்பாடி, எம்.ஜி.ஆர். மது குடிக்க மாட்டார். புகைபிடிப்பதும் இல்லை. அதேபோல் அவரது ரசிகர்களான நாங்கள் யாரும் மது அருந்துவதில்லை. புகை பிடிப்பதும் இல்லை என பேசினார்.

PREV
click me!

Recommended Stories

மோடி மேடையில் பிரேமலதா.. இறுதிக்கட்ட பேரத்தை முடித்த அதிமுக..! இத்தனை சீட்டுகளா..?
நிதின் நபின் என்னுடைய பாஸ்; நான் சாதாரண தொண்டன்.. பிரதமர் மோடி புகழாரம்!