
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தில்லியே திரும்பிப் பார்க்கும்: செங்கோட்டையன் - நீங்கள் ஆட்சி நடத்தும் அழகை உலகமே திரும்பிப் பார்க்கிறதே? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் நிலவும் சூழல் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் தினமும் கருத்து தெரிவித்து வருகிறார். தற்போது அவர் தம்பிதுரை, ஓபிஎஸ், செங்கோட்டையன் என அதிமுக முக்கிய புள்ளிகளை விமர்சித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏக்களிடம் குதிரைபேரம் நடக்கவில்லை: தம்பித்துரை - உண்மை தான். ஆட்டு மந்தைகளிடம் எப்படி குதிரை பேரம் நடத்த முடியும்?
ஜெயலலிதா மரண மர்மம் விலகும் வரை தர்மயுத்தம் தொடரும்: ஓ.பி.எஸ் - ஓஹோ... வாழ்நாள் முழுவதும் தர்மயுத்தம் தொடரும்னு சொல்லுங்க!
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தில்லியே திரும்பிப் பார்க்கும்: செங்கோட்டையன் - நீங்கள் ஆட்சி நடத்தும் அழகை உலகமே திரும்பிப் பார்க்கிறதே?
பிகாரில் கல்விக்கட்டணம் செலுத்தாததற்காக மாணவியின் உடைகள் அவிழ்ப்பு: செய்தி - மனித நேயமற்ற மிருகங்களால் மட்டுமே இது சாத்தியம்!
அதிமுகவுக்கு துணை ஜனாதிபதி பதவி கேட்க வேண்டும்: அதிமுக நாளிதழ் - அடகு வைக்கப்பட்ட தமிழக உரிமைகளுக்கு இது தான் விலையோ?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு துணிச்சல் இல்லை: பொன். இராதாகிருஷ்ணன் - நீங்க சொன்னா சரியாகத் தான் இருக்கும்!
எய்ம்ஸ் இடம் தேர்வு செய்யும் பணியை தமிழகஅரசு எங்களிடம் ஒப்படைத்து விட்டது:பொன்னார்-அது மட்டுமா, அவர்களையே உங்களிடம் ஒப்படைத்து விட்டார்களே!
இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.