சிவகார்த்திகேயன் படத்தை திடீரென பாராட்டிய ராமதாஸ்.. என்ன காரணம் தெரியுமா?

Published : Jun 16, 2022, 06:30 AM IST
சிவகார்த்திகேயன் படத்தை திடீரென பாராட்டிய ராமதாஸ்.. என்ன காரணம் தெரியுமா?

சுருக்கம்

பெற்றோர்கள் இருக்கும் போதே அவர்களை கொண்டாடுங்கள் என்ற பாடத்தை சொல்லும் டான் திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

பெற்றோர்கள் இருக்கும் போதே அவர்களை கொண்டாடுங்கள் என்ற பாடத்தை சொல்லும் டான் திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த படம் டான். இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் ஏற்கனவே டாக்டர் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, மனோபாலா, சிவாங்கி, பால சரவணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்த இப்படம் கடந்த மே மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி இதுவரை ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது.

கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ்.ஜே. சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா? என்பதே படத்தின் கதை. டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. டான் படம் குறித்து பிரபலங்கள் பலரும் நல்ல நல்ல விமர்சனத்தை கொடுத்து இருந்தார்கள். டான் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சிபியை அழைத்து பாராட்டி இருந்தார். இந்நிலையில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசும் இந்த திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)”  என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!என பதிவிட்டுள்ளார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!