இஸ்லாமியர்களின் நிலைமைக்கு ராமதாஸே காரணம்... கேட்டை மூடி ரஜினியை முடித்து வைத்துவிடுவோம்... -திமுக எம்.பி.!

By Thiraviaraj RMFirst Published Feb 15, 2020, 12:27 PM IST
Highlights

வண்ணாரப்பேட்டை சம்பவத்திற்கு காரணமான அதிமுகவும், பாமக நிறுவனர் ராமதாஸும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தருமபுரி திமுக எம்.பி., டாக்டர் செந்தில் வலியுறுத்தி உள்ளார். 
 

வண்ணாரப்பேட்டை சம்பவத்திற்கு காரணமான அதிமுகவும், பாமக நிறுவனர் ராமதாஸும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தருமபுரி திமுக எம்.பி., டாக்டர் செந்தில் வலியுறுத்தி உள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ’’இதற்கு காரணமான அதிமுக அரசு மற்றும் ராமதாஸும்  கண்டிப்பாக இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். பாஜக அமல்படுதிய CAA-விற்கு நீங்கள் அளித்த ஆதரவு வாக்கின் விளைவு தான் இன்று தமிழகம் சந்திக்கும் இந்த நிலைமைக்கு காரணம். இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆள் ஆக நான் நிற்பேன் என்று சொன்னது நீ தானா, சொல் சொல். எங்கே ரஜினிகாந்தை ஆளைக்காணோம்?  கேட்டுல் திறந்த உங்கள் வாழ்க்கையை ஆரம்பித்த தமிழகம் அதே கேட்டை மூடி, முடித்து வைக்கவும் தயங்காது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் ஆன அரசு மற்றும் கண்டிப்பாக இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். 😡 அமல்படுதிய விற்கு நீங்கள் அளித்த ஆதரவு வாக்கின் விளைவு தான் இன்று தமிழகம் சந்திக்கும் இந்த நிலமைக்கு காரணம்.😡 pic.twitter.com/pJujYhYJFQ

— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD)

 

இதற்கு எதிர்கருத்துகளை பலரும் பதிவிட்டு வருகின்றனர். ‘’அவர் சொன்னது வேறு, அவர் சொன்னதாக நீங்களாக ஒன்றை சொல்லி "சொல்,  சொல்" என்பது உங்கள் தரத்தை இறக்குகிறது’’ என்றும், உண்மையில், இல்லாத ஆபத்தை இருப்பதாகக் கூறி முஸ்லிம்களை தூண்டுவது உங்கள் கட்சி தலைவர்தான் 👇. முடிந்தால், ஒரு பொறுப்புள்ள MPயாக அதை தடுக்கப் பாருங்கள். டாக்டர் சார் உங்க மேல மரியாதை இருந்தது, ஆனா எப்படா இஸ்லாமிய சகோதரர்கள் மேல தாக்குதல் நடக்கும் உடனே திரு @rajinikanth அவர்களிடம் கேள்விகேட்க வேண்டும் என்று காத்திருந்தது போல் உள்ளது உங்கள் எண்ணம் , நீங்க எம்.பி போய் அந்த வேலையை பாருங்க முதலில்’’என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். 

ஒரு ஆபத்து என்றால் முதல் ஆள் ஆக நான் நிற்பேன்- சொன்னது நீ தானா, சொல் சொல்.

எங்க sir ஆள காணோம்.

Gate அ திறந்த உங்க வாழ்க்கையை ஆரம்பித்த தமிழகம்,
அதே gate அ முடி,முடித்து வைக்கவும் தயங்காது. pic.twitter.com/DezuI8Y7sa

— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD)

 

மற்றொருவர், ‘’ஆக இஸ்லாமியர்களிடம் ரஜினி ஆதரவை குலைக்க கலவரத்தை தூண்டி, சில உயிரே போனாலும் பரவாயில்லை உங்களுக்கு.. ஏன் சார் இந்த பதவி வெறி.. இதுக்கு பேக் நியூஸெல்லாம் வேற பரப்பி.. தலைவர் CAAவால் ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப்பேன் என்று தானே சொன்னார்? அப்புறம் சாரே எனக்கு ஒரு doubt நீங்கதானே ஒரு MP யாக உள்ளீர்கள் உங்களுக்கல்லவா பிரச்சனையின் உண்மை  நிலை உணர்ந்து அதைப்பற்றி குரல் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது..அதை விடுத்து அந்த கேட்ட போய் தட்டுறிங்க’’என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

click me!