கோழைகள்... நச்சுக்கிருமிகள்... பெரியாரிஸ்டுகளுக்கு ஆதரவாக கிளம்பிய ராமதாஸ்..!

Published : Oct 27, 2020, 11:22 AM IST
கோழைகள்... நச்சுக்கிருமிகள்... பெரியாரிஸ்டுகளுக்கு ஆதரவாக கிளம்பிய ராமதாஸ்..!

சுருக்கம்

தந்தை பெரியாரின் கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்ள துணிச்சல் இல்லாதவர்கள் தான் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோபமடைந்துள்ளார்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்ள துணிச்சல் இல்லாதவர்கள் தான் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோபமடைந்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டிருப்பது கோழைத்தனமான செயலாகும். இச்செயலை செய்தவர்கள் தாங்கள் கோழைகள் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். தந்தை பெரியாரின் கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்ள துணிச்சல் இல்லாதவர்கள் தான் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் பின்னணியில் உள்ள நச்சுக்கிருமிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்!

திருச்சி, இனாம்புலியூரில் கடந்த மாதம் இதே நாளில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கும், இன்றைய நிகழ்வுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும். இரு குற்றங்களிலும் சம்பந்தப்பட்டவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’’எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சித்திரவதையின் நரகம்..! பாஜக ஆட்சியில் நாட்டில் பரவும் பேராசையின் தொற்றுநோய்... ராகுல் அட்டாக்..!
திமுகவை வீழ்த்த பிளான் ரெடி.. தீய சக்தியை வேரறுப்பேன்.. சபதம் எடுத்த சசிகலா!