பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு செய்த மாபெரும் துரோகம்..! பாஜகவை கிழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்..!!

Published : Oct 27, 2020, 11:02 AM IST
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு செய்த மாபெரும் துரோகம்..! பாஜகவை கிழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்..!!

சுருக்கம்

டிஜிட்டல் யுகத்தில் விண்ணப்பங்களை பெற்றுவிட்டோம் அது சம்பந்தமான தொடர் நடவடிக்கைகள் நடந்துவிட்டன. எனவே, இந்த ஆண்டே பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதமாகும். 

மருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய அளவில் ஒதுக்கப்படும் இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. 

டிஜிட்டல் யுகத்தில் விண்ணப்பங்களை பெற்றுவிட்டோம் அது சம்பந்தமான தொடர் நடவடிக்கைகள் நடந்துவிட்டன. எனவே, இந்த ஆண்டே பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதமாகும். அரசு நினைத்தால் சில நாட்களிலேயே விண்ணப்பம் பெற்று இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். பாஜக மற்றும் சங்பரிவாரம் எந்தக் காலத்திலும் சமூகநீதி கோட்பாட்டையோ ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையையோ ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. எனவேதான் அவர்கள் மருத்துவ உயர் கல்வியில் தமிழக அரசு கிராமப்புறத்தில் பணிபுரிவோருக்கு இட ஒதுக்கீடு செய்ததை இந்திய மெடிக்கல் கவுன்சில் மூலம் தடுத்து நிறுத்தினார்கள். 

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று உச்சநீதிமன்றம் பல நேர்வுகளில் சொல்லியிருக்கிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பதை நீதிமன்றம் கடைப்பிடிக்க தவறி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழக பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனை பாதிக்கக்கூடியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதேசமயம் பாஜக மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சமூகநீதிக்கு எதிரான தன் நிலைப்பாட்டின் காரணமாக தமிழக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பெரும் துரோகம் இழைத்திருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். என தெரிவித்துள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

Women Free Bus Travel: பெண்களுக்கு இலவச பயணம்.! எந்த பேருந்துகளில் கட்டணம் கிடையாது?
Free 3 LPG Cylinders Per Year: விலையில்லாமல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்.! யாருக்கு கிடைக்கும் தெரியுமா?