தூக்கு தண்டனையை விட வலி குறைந்த மரண தண்டனை தேவை..! உச்சநீதிமன்ற கருத்திற்கு ராமதாஸ் எதிர்ப்பு

By Ajmal Khan  |  First Published Mar 22, 2023, 11:57 AM IST

உலகில் 111 நாடுகளில் சாவுத்தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. 24 நாடுகளில் அது  நடைமுறையில் இல்லை. உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த இந்தியா சாவுத்தண்டனை ஒழிப்பில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


தூக்கு தண்டனை தேவையா.?

தூக்கு தண்டனைக்கு பதிலாக வலி இல்லாத மாற்று மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக குழு அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இஇது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தூக்குத் தண்டனை கொடியதாக இருப்பதால், அதைவிட வலிகுறைந்த, கண்ணியமான முறையில் சாவுத் தண்டனையை நிறைவேற்ற முடியுமா? என்பதை ஆராய குழு அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் பார்வை சரியானதாக இருக்கலாம்; ஆனால், அது தீர்வல்ல!

Latest Videos

தமிழக ஆளுநரின் கருத்திற்கு திடீரென மறுப்பு தெரிவித்த மத்திய அரசு..!உற்சாகத்தில் திமுக

மரண தண்டனை ஒழிக்க வேண்டும்

சாவுத்தண்டனையே மனிதநேயம் அற்றது எனும் போது, அதை நிறைவேற்றுவதற்கான  வழிமுறைகளில் மனிதநேயமும், கண்ணியமும் எங்கிருந்து வரும்? சாவுத்தண்டனையே காட்டுமிராண்டித்தனம் என்பதால் அதற்கு ஒட்டுமொத்தமாக முடிவு கட்டுவது தான் தீர்வாக இருக்க முடியும்! 

தூக்குத் தண்டனை கொடியதாக இருப்பதால், அதைவிட வலிகுறைந்த, கண்ணியமான முறையில் சாவுத் தண்டனையை நிறைவேற்ற முடியுமா? என்பதை ஆராய குழு அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் பார்வை சரியானதாக இருக்கலாம்; ஆனால், அது தீர்வல்ல!(1/4)

— Dr S RAMADOSS (@drramadoss)

 

குற்றம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையின் நோக்கம் அவர்களைத் திருத்துவது தான். அதற்கு சிறை தண்டனையே சரியானதாக இருக்கும். குற்றமிழைத்த மனிதர்களுக்கு திருந்தி வாழ வாய்ப்பு அளிக்காமல், அவர்களின் வாழ்க்கையையே முடிப்பது இயற்கை நீதியாக இருக்காது! உலகில் 111 நாடுகளில் சாவுத்தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. 24 நாடுகளில் அது  நடைமுறையில் இல்லை. உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த இந்தியா சாவுத்தண்டனை ஒழிப்பில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும். இனியாவது சாவுத்தண்டனையை ஒழிக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஆண்களை விட மகளிருக்கு குறைவான ஊதியம் வழங்குவதா.? இது மன்னிக்கக்கூடாத அநீதி.! அன்புமணி ஆவேசம்

click me!