கூட்டணிக்காக இப்படி இருப்பதில் தப்பே இல்ல... ராமதாஸ் பலே விளக்கம்!!

By sathish kFirst Published Feb 19, 2019, 12:56 PM IST
Highlights

மக்களவை தேர்தல் அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டது பாமக.  அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? என விளக்கம் அளித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ்.  

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் அதிமுக தரப்பில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏற்கனவே அனைவரும் எதிர்பார்த்தபடியே பாமக அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது.  ராமதாஸ், அன்புமணி  ஆகியோருடன் அதிமுக இன்று கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில்  பழனிசாமியும், ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் 4 தொகுதிகள் மட்டுமே பாமகவுக்கு ஒதுக்கப்படும் என்ற தகவல்கள் வந்த நிலையில், ஒரேயடியாக 7 தொகுதிகளை அதிமுக வழங்கியுள்ளது. கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்படுகிறது. ஏற்கனவே வட மாவட்டங்களில் செல்வாக்கு இருப்பதால் அதிமுகவில் இந்த சலுகை கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் அதிமுக கூட்டணி குறித்து  கூறுகையில்,  ’’திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதுதான் 2011 முதல் பாமகவின் நிலைப்பாடு.  இடைப்பட்ட காலத்தில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.   2018 டிசம்பர் 29,30 ல் கோவையில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானத்தின்படி ஒத்த கருத்துடையை கட்சிகளூடன் கூட்டணி அமைக்க தீர்மானம் நிறைவேற்றது. இரு திராவிட கட்சிகளில் ஒன்றுடன் அணி சேருவதுதான் வாய்ப்பாக இருந்தது. கொள்கைகளில் பாமக தேக்குமரமாக இருந்து வருகிறது. கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை’’என்று தெரிவித்துள்ளார்.   

click me!