அதிமுகவுடன்- பாமக கூட்டணி சேர்ந்தது ஏன்..? ராமதாஸ் வெளியிட்ட பகீர் ப்ளான்..!

By Thiraviaraj RMFirst Published Feb 19, 2019, 12:11 PM IST
Highlights

கடந்த 2011-ல் அதிமுக ஆட்சியமைத்தது முதலே, அக்கட்சியையும், ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்த பாமக தலைமை தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விளக்கி உள்ளார். 

கடந்த 2011-ல் அதிமுக ஆட்சியமைத்தது முதலே, அக்கட்சியையும், ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்த பாமக தலைமை தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விளக்கி உள்ளார். 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2019 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக உடன்பாடு செய்து கொண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதனையடுத்து ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து பேசினர். அப்போது பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ’’அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றிக் கூட்டணியாக செயல்படும். பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது பின்னர் அறிவிக்கப்படும். அதிமுகவுடன் ஏன் கூட்டணி சேர்ந்தோம் என்பதை விளக்க அன்புமணி ராமதாஸ் ஒரு பிரத்யேகமான செய்தியாளர்கள் சந்திப்பை கூட்டி விளக்க இருக்கிறார். அத்தோடு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக சில கோரிக்கைகளை வைத்திருக்கிறது. மக்கள் நலனுக்காக, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக 10 கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். 

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தல். கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் 20 நீர்ப்பாசன இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றுதல், தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். இது முக்கியமான தீர்மானம். இதற்கான முன் முயற்சிகளை அதிமுக எடுத்துள்ளது. இதற்கான தீர்மானத்தை அமைச்சர்கள் ஒன்றுகூடி எடுத்திருக்கிறார்கள். இந்த கோரிக்கைகளுக்கு இரண்டு கட்சி ஆதரவும் இருக்கிறது. அதற்காகத் தான் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்திருக்கிறோம்’’ என அவர் தெரிவித்தார்.

click me!