அதிமுகவோடு கூட்டணி வைத்த காரணத்தால் ராமதாஸ் மீது அதிருப்தியாகி உடனடியாக பாமகவிலிருந்து விலகினார்கள். முக்கிய நபர்களான நடிகர் ரஞ்சித், ராஜேஸ்வரி பிரியா போன்றோர் அப்போதே விலகிய நிலையில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்களில் ஒருவரான பொங்கலூர் மணிகண்டன் இன்று பாமகவில் இருந்து விலகியிருக்கிறார் .
அதிமுகவோடு கூட்டணி வைத்த காரணத்தால் ராமதாஸ் மீது அதிருப்தியாகி உடனடியாக பாமகவிலிருந்து விலகினார்கள். முக்கிய நபர்களான நடிகர் ரஞ்சித், ராஜேஸ்வரி பிரியா போன்றோர் அப்போதே விலகிய நிலையில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்களில் ஒருவரான பொங்கலூர் மணிகண்டன் இன்று பாமகவில் இருந்து விலகியிருக்கிறார் .
பாமக துணைத்தலைவர் மணிகண்டன் பாமகவினர் மத்தியில் காடுவெட்டி குருவிற்கு இணையான தலைவராக இவர் பார்க்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவருக்கும் ராமதாஸ் குடும்பத்திற்கும் மனஸ்தாபங்கள் இருந்து வந்தது.
கடந்த பிப்ரவரி மாதமே இவர் பாமகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகி, பின்பு மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாமகவில் இருந்து விலகுவதாக பொங்கலூர் மணிகண்டன் அறிவித்துள்ளார். தற்போது அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
திமுக - அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சையை அளிக்கிறது. பாமக வெளியிடும் அறிக்கைகள் முதல் போராட்டங்கள் வரை அனைத்தின் பின்னணியிலும் பேரம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ராமதாஸ் பேரம் நடத்திவிட்டுதான் போராட்டமே நடத்துவார் என்று மணிகண்டன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கட்சியிலிருந்து விலகியது குறித்தும் திமுகவோடு கூட்டணி அமைத்தது பற்றியும் பல்வேறு பகீர் தகவல்களை தனது பேட்டியில் கூறியிருக்கிறார். பாமக மக்கள் பணத்தை ஏமாற்றிவிட்டது. வன்னியர்களிடம் வாங்கிய நிதியை அன்புமணியும், ராமதாசும் மொத்தமாக அபகரித்துவிட்டனர். அதிமுக - பாமக கூட்டணி பேரக்கூட்டணி . அதுமட்டுமா திமுகவோடு கூட்டணி வைக்க பின்னணியில் பெரிய அளவில் பணம் விளையாடி இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
நானும் தலைமை முடிவெடுத்துவிட்டதே என்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பரப்புரைக்கு செல்லும் இடங்களில், ‘எவ்வளவு ரூபா வாங்கிட்டு கூட்டணிவச்சீங்க?’ என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவு கேட்கிறார்கள். அதனால் அவசரப்பட்டு அல்ல நன்கு யோசித்தே இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். கடைசியாக, நானும் என் ஆதரவாளர்களும் விலகிவிட்டோம். அடுத்தகட்டத்தை விரைவில் அறிவிப்பேன் என பொங்கலூர் மணிகண்டன் கூறியிருக்கிறார்.