ராகுல் வேண்டவே, வேண்டாம்! : தடுத்தார் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸில் வெடித்தது புது பஞ்சாயத்து.

By Vishnu PriyaFirst Published Apr 10, 2019, 1:54 PM IST
Highlights

தேசிய காங்கிரஸோடு தி.மு.க. எவ்வளவுதான் ஒட்டி உறவாடினாலும் கூட ப.சிதம்பரம்  மட்டும் எப்போதுமே கருணாநிதியை சைலண்டாக எதிர்த்துக் கொண்டே இருப்பார். அரசியல் அதிமேதாவிகளான இருவருக்குள்ளும் ஓடிய ஈகோவும் இதற்கு முக்கிய காரணம். 
 

தேசிய காங்கிரஸோடு தி.மு.க. எவ்வளவுதான் ஒட்டி உறவாடினாலும் கூட ப.சிதம்பரம்  மட்டும் எப்போதுமே கருணாநிதியை சைலண்டாக எதிர்த்துக் கொண்டே இருப்பார். அரசியல் அதிமேதாவிகளான இருவருக்குள்ளும் ஓடிய ஈகோவும் இதற்கு முக்கிய காரணம். 

நடுத்தர வயது கருணாநிதி, அரசியலில் அல்லு தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தபோது இளைஞரான ப.சிதம்பரம் தி.மு.க.வை விமர்சித்து தனிப்பட்ட முறையில் ஒரு கட்டுரை எழுதிவிட்டார். அதை வாசித்துவிட்டு கடுப்பின் உச்சம்போன கருணாநிதி ‘சிவகங்கை சின்னத்தம்பி. உன் பேனாவில் மை ஊற்றி எழுது, பொய் ஊற்றி எழுதாதே’ என்று போட்டாரே ஒரு போடு. இப்படியாக இருவருக்கும் இடையிலான மோதல் கருணாநிதியின் இறுதி காலம் வரை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. 

2ஜி விவகாரத்தில்  ஒட்டுமொத்த பிரச்னையையும் தி.மு.க.வின் ஆ.ராசாவின் தலையிலேயே சிதம்பரம் தூக்கி வைக்க, அதற்கு ராசா கொடுத்த ஆதார பதிலடிகள் அசாதாரணமானவை. மன்மோகனையே தன் வாதாட்டத்தில் தலைசுற்ற வைத்த ராசா, சிதம்பரத்தின் கருத்தையெல்லாம் சிதறடித்தார். 2ஜி விவகாரத்தில் சிதம்பரத்தின் மீது தி.மு.க.வுக்கு வெளிப்படையான கடும் விமர்சனம் உண்டு. 

ஸ்டாலின் தி.மு.க. தலைவராக உருவெடுத்து, நாடாளுமன்ற கூட்டணி அமைந்த பின்னும் கூட சிதம்பரம் பெரிதாய் சிலாகிக்கவில்லை அவரை. ஆனால் தனது மகன் கார்த்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சிவகங்கை வந்த ஸ்டாலின், பழைய பகைகள் எதையும் மனதில் வைக்காமல் மிகவும் இறங்கி வந்து பேசினார், செயல்பட்டார், தன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ‘கார்த்தி வென்றேயாக வேண்டும்.’ என்று உத்வேகம் கொடுத்தார். இதெல்லாம் சிதம்பரத்தை நெகிழ வைத்துவிட்டது. 

இந்நிலையில், தமிழகத்தில் பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், மோடி பல இடங்களில் இங்கே பிரசாரத்தை மேற்கொண்டிருக்க, ராகுல் அதில் பாதி கூட்டங்கள் கூட அட்டெண்ட் செய்யவில்லையே! என தமிழக காங்கிரஸ் நிர்வாகிக மத்தியில் ஒரு கவலை இருந்தது. இதை மேலிடத்துக்கு அவர்கள் தெரிவிக்க, ராகுலின் தமிழக பிரசார தேதிகளை முடிவு செய்திட குலாம்நபி ஆசாத் சிதம்பரம் உள்ளிட்டோரிடம் பேசினாராம். 

உடனே சிதம்பரம் ‘இளம்தலைவர் அவருக்கான தொகுதி  மற்றும் நமக்கு வீக் ஆன மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தட்டும். தமிழகத்தில் ஸ்டாலின் பிரசாரம் நம் கூட்டணிக்கு மிக வீரியமாக இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்னைகளின் வீரியத்தை புரிந்து திறமையாய் பரப்புரை செய்கிறார். எனவே தமிழகத்துக்கு இனி ராகுல் வரவேண்டும் எனும் அவசியம் இல்லை. நிச்சயம் பெரிதாய் வெல்வோம்.’ என்று சொல்லி, ஸ்டாலினுக்கு பெரிய சர்டிஃபிகேட் கொடுத்தாராம். இது ஆஸாத் வழியே ராகுலுக்கு போக, ராகுல் ஸ்டாலினுக்கு மெசேஜில் நன்றியும், உற்சாகமும் சொல்ல ஒரே கலகலப்புதான். 

ஆனால் தமிழக காங்கிரஸின் பிற நிர்வாகிகளோ ‘இவர் மகனுக்கு ரொம்ப ஆதரவா ஸ்டாலின் பேசிட்டதாலே என்னமோ நாற்பது தொகுதியும் ஜெயிச்சுட்டா மாதிரி குதிக்கிறார். ராகுல்  நாலஞ்சு இடங்கள் வந்தால்தான் எழுச்சி இன்னும் அதிகரிக்கும்.  ஆனால் இவர் எல்லாத்தையும் கெடுக்கிறார். நாளைக்கு சரிவு வந்தால் இவர்தான் முழு பொறுப்பையும் ஏற்கணும்.’ என்று டெல்லி வரை புதிய தலைவலியை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

click me!