ராமர் கோயில் கட்டுமான அடிக்கல் நாட்டு விழா. அத்வானிக்கு அழைப்பு இல்லையா? விளக்கம் தரும் விழாகுழு.!

By T BalamurukanFirst Published Aug 4, 2020, 9:04 AM IST
Highlights

பாஜக மூத்த தலைவர் அத்வானி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் வயது முதுமையின் காரணமாக கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பாஜக மூத்த தலைவர் அத்வானி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் வயது முதுமையின் காரணமாக கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெற இருக்கும் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கான பூமி பூஜைக்கு எல்.கே.அத்வானி கலந்து கொள்வது சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது. மூத்த பாஜக தலைவர் அத்வானி கடந்த காலங்களில் ராமர் கோவில் போராட்டத்தின் பிரதான நபராக இருந்து வருகிறார். பாபர் மசூதி வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட நீண்ட நேரம் காணொளி மூலம் வாக்குமூலம் அளித்தார்.  

90களின் முற்பகுதியில் அவரது கிளர்ச்சிகள் மற்றும் யாத்ராக்கள் அடிமட்டத்தில் பாஜகவின் கட்டமைப்பை அதிகரிப்பதில் திட்டவட்டமான பங்கு கொண்டுள்ளன.கொரோனா வைரஸ் தொற்று மற்றும் நடைமுறையில் உள்ள நெறிமுறை காரணமாக, பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று "ராம் ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா"வின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ள நிலையில் அத்வானிக்கு 92 வயது.விழாவில் கலந்து கொள்ள நேபாளத்தின் ஜானகி மந்திர் மகந்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்வானி ஜி எப்படி வருவார்? பராஷரன் ஜி எப்படி வருவார்?” என இன்று நடைபெற்ற செய்தியாளர்களை சந்தித்த சம்பத்ராய்..

"வயதான குடிமக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் திறத்தல் செயல்முறை குறித்த அனைத்து அரசாங்க ஆலோசனைகளிலும், வயதான குடிமக்கள் எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.பூமி பூஜை நடக்கும் இடத்தில் எந்த மொபைல் போன்களும் அனுமதிக்கப்படாது. பங்கேற்பாளர்கள் பைகளை எடுத்துச் செல்லக் கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


ஒவ்வொரு அழைப்பாளருக்கும் ஒரு குறியீட்டைக் கொண்டிருக்கும் அழைப்பிதழ் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒரு அழைப்பாளருக்கு ஒரு முறை மட்டுமே நுழைவு கிடைப்பதை இந்த குறியீடு உறுதி செய்யும்.எந்தவொரு காரணத்திற்காகவும் அழைப்பாளர் அந்த இடத்தை விட்டு வெளியேறினால், அவர் மீண்டும் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்.பூமி பூஜை விழாவிற்கு 133 சாதுக்கள் அழைக்கப்பட்டுள்ளது.இந்த விழாவிற்கு 175 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

விழாவில் கலந்து கொள்ள நேபாளத்தின் ஜானகி மந்திர் மகந்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

click me!