DMK : மீண்டும் உதயநிதி புராணம்..கடுப்பான சபாநாயகர்.. திமுக எம்.பி ராஜேஷ்குமாரின் ரிப்பீட் மோட் !

By Raghupati RFirst Published Dec 10, 2021, 8:20 AM IST
Highlights

மாநிலங்களவையில் முதல்வர் ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின் பெருமையை பேசி மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் எம்.பி ராஜேஷ்குமார்.

நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி-க்களாக எம்.எம்.அப்துல்லா, என்.வி.என்.சோமு, கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றித் தேர்வானார்கள். மாநிலங்களவை சபாநாயகர் வெங்கைய நாயுடு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது ராஜேஷ்குமார் தனது உரையை முடிக்கும்போது,  ‘வெல்க தளபதி... வெல்க உதயநிதி’ என முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை வாழ்த்தி முழக்கமிட்டார். இதை கவனித்த வெங்கைய நாயுடு, `இதெல்லாம் அவைக்குறிப்பில் ஏறாது’ என்று கடிந்துகொண்டார். 

மேலும், ராஜேஷ்குமாரின் இந்தச் செயலை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.இங்கதான் இப்படி புகழ் பாடுனீங்க, அங்கேயுமா ? என்றும், சபாநாயகரே கடுப்பான மொமெண்ட் இதுதான்யா என்றும் ட்ரோல் செய்து மீம்களை தெறிக்கவிட்டனர்.  மீண்டும் அதே சம்பவத்தை ரிப்பீட் மோடில் செய்து, கேலிக்கு உள்ளாகி இருக்கிறார் ராஜேஷ்குமார் எம்.பி. 

https://www.youtube.com/watch?v=pOlNHa0hMoM

'என்னை தேர்வு செய்த தளபதி ஸ்டாலினுக்கும், இளைஞரணி எழுச்சி நாயகனாக விளங்கும் எங்கள் அண்ணன் உதயநிதி அவர்களையும் வணங்குகிறேன். நேற்றைய நாள் இந்திய படைத்தளபதி பிபின் ராவத் குன்னூரில் ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்டார்.நேற்றைய தினமே எங்கள் முதல்வர் மீட்பு பணியை துரிதப்படுத்தினார். 

அதுமட்டுமல்ல,  மாலை 5 மணிக்கு நீலகிரி சென்று ராணுவ வீரர்களிடம் நிலையை குறித்து விசாரித்தார்’ என்று பேசும் போதே அவையில் மற்ற உறுப்பினர்கள் தலையிட, உடனே சபாநாயகராக இருந்த சஸ்மிட் பத்ரா அவர்கள், மசோதாவை பற்றி மட்டும் பேசுங்கள் என்று கூற, எங்கள் தலைவருக்கு நன்றியை கூறினேன் என்று பவ்யமாக கூறி தொடர்ந்து பேசினார். இறந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்னரே முதல்வர் அங்கிருந்து கிளம்பினார்’ என்று கூறி முடிப்பதற்குள் அவையில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த மற்றொரு எம்பியான டி. கே. எஸ். இளங்கோவன் எழுந்து, எங்கள் தலைவருக்கு நாங்கள் நன்றியை சொல்லுகிறோம்.உங்களுக்கு என்ன ? என்று கேட்க, மசோதாவை பற்றி மட்டும் பேசுங்க என்று மீண்டும் பேசினார். மறுபடியும் தொடர, மீண்டும் ஏன் ? இதையே பேசுறீங்க என்று கடுப்பானார் சபாநாயகர். 

ராஜேஷ்குமார் பேச்சுக்கு தொடர்ந்து எதிர்த்து பேசினார் பாஜக எம்.பி எல்.முருகன். பெண்களுக்கு சொத்துரிமை,விவசாயிகளுக்கு கடன் ரத்து என்று மக்களின் வாழ்வுக்கு உழைத்தவர் கலைஞர்.உழைப்பு,உழைப்பு என்று இருப்பவர் எங்கள் தளபதி’ என்றார். சபாநாயகர் ‘ராஜேஷ்குமார்ஜி, மசோதாவை பற்றி மட்டும் பேசுங்க,உங்களுக்கு நேரம் அதுக்கு மட்டும் இருக்கு,இதெல்லாம் பேசாதீங்க ? ’ என்று கேள்வி எழுப்ப, மீண்டும் பார்முக்கு வந்தார் எம்.பி ராஜேஷ்குமார். அவையில் மீண்டும் சலசலப்பு ஏற்பட, மசோதாவை மட்டும் பேசிக்குறேன் என்று ஒருவழியாக சபாநாயகரின் கருத்துக்கு வந்தார். 

இந்திய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு கோரிக்கையின் படியே பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் மதுரையில் இந்த மருந்தியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NIPER) அமைய வேண்டும். அதேபோல மதுரையில் எய்ம்ஸ் அமைய வேண்டும் என்றும், அதற்கான நிதியை வழங்க வேண்டும் என்று கூறி தனது உரையை முடித்தார். மீண்டும் முதல்வர் ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின் புராணம் ராஜ்யசபாவில் பேசி, மீண்டும் கவனத்துக்கு மட்டுமல்ல விவாதப்பொருளாகவும் மாறியிருக்கிறார் எம்.பி ராஜேஷ்குமார். 

click me!