AIADMK: திமுகவிற்கு இனி தேய்பிறை தான்.. ஸ்டாலினால் விடியல் தர முடியாது.. நத்தம் விசுவநாதன் சரவெடி.!

By vinoth kumarFirst Published Dec 10, 2021, 8:01 AM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது.

இனி வரும் தேர்தலில் திமுகவிற்கு வீழ்ச்சி தான் இதை யாராலும் தடுக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார். 

திண்டுக்கல்லில் நடந்த அதிமுக கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அவர்;- அதிமுகவுக்கு இனி ஒவ்வொரு நாளும் வளர்ச்சிதான்.  திமுகவை விட அதிமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டது என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. திமுகவிற்கு தேய்பிறை தான். ஸ்டாலினால் இனி விடியல் தர முடியாது என்றார்.

இதையும் படிங்க;- TTV Dhinakaran: ஆஹா மீண்டும் முதல்ல இருந்தா.. ஸ்லீப்பர் செல்கள் உரிய நேரத்தில் வெளியே வருவார்கள்.. டிடிவி.!

இதையும் படிங்க;- நத்தம் விஸ்வநாதன் வெற்றிக்கு ஆபத்தா? நீதிமன்றம் படியேறிய திமுக.. அதிர்ச்சியில் அதிமுக..!

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். திமுகவின் வீழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. அதிமுகவை அசைக்க முடியாது என்ற எண்ணம் திமுகவினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது திமுக தடுமாறி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் அசைக்கமுடியாத கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கூட வேண்டும் என்றார். 

இதையும் படிங்க;-Varun Singh: 80% தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை.. பெங்களூரு அழைத்து செல்லப்படுகிறார் வருண் சிங்..!

மக்கள் விரோத விடியாத திமுக அரசை கண்டித்து பழநியில் நந்தம் விசுவநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் பலியானதைத் தொடர்ந்து ஆர்பாட்டத்தை தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

click me!