ராஜ்யசபா எம்பி சீட்..! அல்வா கொடுத்த அதிமுக..! தேமுதிகவின் குட்ட குட்ட குனியமாட்டோம் பின்னணி..!

By Selva KathirFirst Published Feb 1, 2020, 8:40 AM IST
Highlights

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக கணிசமான இடங்களை வென்றது. ஆனால் எவ்வளவோ கேட்டும் மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் பதவி மட்டும் தேமுதிகவிற்கு வழங்கப்படவில்லை. அதே சமயம் முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தை பாமகவிற்கு ஒதுக்கியது அதிமுக. தேமுதிகவிற்கு கணிசமான துணைத் தலைவர் பதவிகள் மட்டும் கிடைத்தன.

தேமுதிக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி ஆனால் கூட்டணிக்காக குட்டக் குட்ட குனியமாட்டோம் என்று பேசி அதிமுகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தேமுதிக.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக கணிசமான இடங்களை வென்றது. ஆனால் எவ்வளவோ கேட்டும் மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் பதவி மட்டும் தேமுதிகவிற்கு வழங்கப்படவில்லை. அதே சமயம் முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தை பாமகவிற்கு ஒதுக்கியது அதிமுக. தேமுதிகவிற்கு கணிசமான துணைத் தலைவர் பதவிகள் மட்டும் கிடைத்தன.

இருந்தாலும் கூட கட்சி ஆரம்பித்தது முதல் தற்போது தான் தேமுதிக சார்பில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சென்னை தேமுதிக அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து கொடுக்கப்பட்டது. முன்னதாக அவர்களை வாழ்த்தி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது தேர்தலில் வென்றவர்களை பாராட்டி பேசியவர், வழக்கம் போல் தேமுதிக தான் தமிழகத்தின் சக்தி வாய்ந்த கட்சி என்கிற ரீதியில் பேசி வந்தார்.

ஒரு கட்டத்தில் பிரேமலதாவின் பேச்சு கூட்டணியை நோக்கி திரும்பியது. தேமுதிக தொடர்ந்து கூட்டணி தர்மத்தை கடை பிடித்து வருவதாக கூறிய பிரேமலதா, ஆனால் தாங்கள் குட்டக் குட்ட குனிவோம் என்று நினைக்க வேண்டாம் என்று எச்சரித்தார் பிரேமலதா. தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தங்களுக்கு உரிய மரியாதை தரப்பவிடவில்லை என்பதை தான் பிரேமலதா இப்படி சுட்டிக்காட்டியதாக பேச்சுகள் எழுந்தன.

மேலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளை மிக முக்கியமானதாக கருதுகிறது அதிமுக. இதே போல் ரஜினி தலைமையில் அமைய உள்ளதாக கூறப்படும் கூட்டணியில் பாமக, தேமுதிகவை சேர்கக்வும் முயற்சிகள் நடைபெறுகின்றன. திமுக தரப்பில் இருந்தும் கூட புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்கக் தற்போதே பேச்சுகள் எழுந்துள்ளன.

இப்படியான சூழலில் வழக்கம் போல் தங்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதாக தேமுதிக கருதுகிறது. இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சமயத்தில் தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா எம்பி சீட் கோரப்பட்டது. ஆனால் பாமகவிற்கு கொடுத்த அதிமுக தேமுதிகவிற்கு பார்க்கலாம் என்று கூறியிருந்தது. இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலின் போது அதிமுகவிடம் ராஜ்யசபா எம்பி சீட்டை தேமுதிக கோரியது.

ஆனால் வழக்கம் போல் அடுத்த முறை பார்க்கலாம் என்று அதிமுக கூறிவிட்டது. இதே ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் வழக்கம் போல் பாமகவிற்கு அதிக இடங்களை கொடுத்து தேமுதிகவை தொங்கலில் விட்டது அதிமுக. இப்படியான சூழலில் அடுத்த மாநிலங்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களுக்கான இடத்தை மீண்டும் தேமுதிக அதிமுகவிடம் கோரியதாக கூறப்படுகிறது. இந்த முறையும் சாதகமான பதில் வராத நிலையில் தான் குட்டக் குட்ட குனியமாட்டோம் என்று பிரேமலதா வெடித்துள்ளாராம்.

click me!