மாநிலங்களவை எம்.பி. பதவி... குறுக்கே நிற்கும் சசிகலா புஷ்பா... வைகோ கொடுத்த தரமான பதிலடி..!

By vinoth kumarFirst Published Jul 12, 2019, 10:20 AM IST
Highlights

மாநிலங்களவை எம்பியாக பதவிப் பிரமாணம் எடுக்க அனுமதிக்க கூடாது என்று சசிகலா புஷ்பா எழுதிய கடிதத்திற்கு வைகோ தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

மாநிலங்களவை எம்பியாக பதவிப் பிரமாணம் எடுக்க அனுமதிக்க கூடாது என்று சசிகலா புஷ்பா எழுதிய கடிதத்திற்கு வைகோ தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு பிறகு வைகோ மாநிலங்களவை செல்ல உள்ளார். தொடர்ந்து 3 முறை திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர் வைகோ. பிறகு கலைஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதிமுகவை தொடங்கி மக்களவை எம்.பி.யாக செயல்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் திமுக ஆதரவுடன் மீண்டும் வைகோ மாநிலங்களவை செல்ல உள்ளார். 

மாநிலங்களவை எம்பி வேட்பாளராக வைகோ அறிவிக்கப்பட்ட நிலையில் தேசத்துரோக வழக்கில் அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை அடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வைகோ வேட்பு மனு ஏற்கப்பட்டது. நேற்று மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் வைகோ பெற்றுக் கொண்டார்.

இதன் மூலம் வைகோ மாநிலங்களவைக்கு செல்வது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா புஷ்பா எம்பி மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வைகோ தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்றது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோ மாநிலங்களவை தேர்தலில் வென்று எம்பியாகியுள்ளதாகவும் சசிகலா புஷ்பா கூறியுள்ளார். 

தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோவை எப்படி சட்டம் இயற்றும் மாநிலங்களவைல் அனுமதிக்க முடியும் என்றும் சசிகலா புஷ்பா அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே வைகோவை மாநிலங்களவை எம்பியாக பதவிப்பிரமாணம் எடுக்க அனுமதிக்க கூடாது என்றும் சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கடிதம் குறித்து வெங்கய்ய நாயுடு பரிசீலித்து முடிவெடுப்பார். 

இந்த நிலையில் நேற்று வெற்றிச் சான்றிதழை பெற்றுவிட்டு திரும்பிய வைகோவிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, சசிகலா புஷ்பா உங்களை எம்பியாக பதவிப்பிரமாணம் எடுக்க அனுமதிக்க கூடாது என்று வெங்கய்ய நாயுடுவிற்கு கடிதம் எழுதியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அப்படியா? ரொம்ப நல்லது என்று கூறிவிட்டு புறப்பட்டார் வைகோ. 

வழக்கமாக இது போன்ற கேள்விகளுக்கு சுடச்சுட பதில் அளிப்பது வைகோவின் வழக்கம். ஆனால் தன் மீது புகார் கூறிய ஒருவரின் தரத்தை அறிந்து அதற்கு நிதானமாக வைகோ அளித்த பதில் தரமான பதிலாகவே கருதப்படுகிறது.

click me!