கஜாவுக்கு நளினி நிதி உதவி...! ஜெயிலில் உழைத்த காசு... இப்படியும் ஒரு மனசு...

By vinoth kumarFirst Published Nov 21, 2018, 2:12 PM IST
Highlights

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராஜீவ் கொலைவழக்கில் 27 வருடங்களாக சிறையில் வாடும் நளினி தனது பங்களிப்பாக ரூ.1000 வழங்கியுள்ளார் நளினி. இத்தொகையை தனது வழக்கறிஞர் மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியிருப்பதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேலூர் தொரப்பாடி மத்திய சிறையில் மகளிர் பிரிவில் தண்டனை அனுபவித்துவரும் நளினி கடந்த 4 நாட்களாகவே கஜா புயலால் மக்கள் அனுபவித்துவரும் வேதனைகள் குறித்து தனது வழக்கறிஞருடன் பகிர்ந்து வந்தார். தன்னால் பெரிய அளவில் உதவிகள் எதுவும் பண்ணமுடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் இன்று தனது வழக்கறிஞரை அழைத்த அவர், சிறையில் தனது உழைப்புக்கு ஊதியமாகக் கிடைத்த தொகையிலிருந்து ரூ.1000 வழங்க விரும்புவதாகவும், அதை முதல்வரின் கஜா புயல் நிதிக்கு வழங்கிவிடும்படியும் தெரிவித்திருக்கிறார்.

’ஜெயிலில் உழைத்த காசு... இப்படியும் ஒரு  மனசு...தொகைதான் சிறியதே ஒழிய அதை வழங்க முன் வந்த உங்க மனசு மிகப்பெரியது நளினி அக்கா’ என்று சமூக வலைதளங்களில் மக்கள் நளினியை வாழ்த்திவருகின்றனர்.

click me!