இலவச பொருள்களுக்கு பணம் கேட்கும் அதிகாரிகள்...நிவாரணப்பொருட்கள் தேங்கி நிற்கும் அவலம்

Published : Nov 21, 2018, 01:42 PM ISTUpdated : Nov 21, 2018, 01:43 PM IST
இலவச  பொருள்களுக்கு பணம்  கேட்கும் அதிகாரிகள்...நிவாரணப்பொருட்கள் தேங்கி நிற்கும் அவலம்

சுருக்கம்

பர்வீன் டிராவல்ஸ் போன்ற ஒன்றிரண்டு தனியார் பஸ் நிறுவனங்கள் கஜா புயல் நிவாரணப் பொருட்களைக் கொண்டுசெல்ல இலவச சேவை அறிவித்திருந்தபோதிலும் சில அரசு அதிகாரிகள் சூழல் அறியாமல் முரண்டு பிடிப்பதால் நிவாரணப்பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்கப் படாமல் தேங்கிக்கிடக்கின்றன.

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் இருந்து நாகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 4 லாரிகளில் காய்கறிகள், பழங்கள், துணிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, தண்ணீர் பாட்டில், பெண்களுக்கு தேவையான நாப்கின்,மளிகை சாமான்கள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் சுமார் 40 லட்ச மதிப்பிலான பொருட்கள் அனுப்பட்டது. இவை சரியான முறையில் சரியான நேரத்தில் விநியோகிக்கப்பட்டால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.

ஆனால் இதனை மாவட்ட நிர்வாகம் வாங்க மறுப்பதோடு இறக்கு கூலி கேட்டு இம்சை கொடுத்திருக்கின்றனர். மற்றும் நிவாரணப் பொர்ட்களைக் கொண்டு சென்ற சிஎம்டிஏ அதிகாரிகளை சேமிப்பு கிடங்கு அதிகாரிகள்  அலட்சியம் செய்வதோடு  மக்களுக்கு இலவசமாக வந்த பொருட்களை அதிகாரி வாங்க மறுப்பதால்  நாகை வெளிப்பாளையம் புதுப்பஸ்ஸாண்டில் பல மணி நேரமாக காத்திருக்க வேண்டிய சூழலும் நிலவி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!