நான் இன்னும் ஃபுல் டைம் அரசியல்வாதியா மாறலப்பா !!  ரஜினிகாந்த் அதிரடி !!

 
Published : Mar 14, 2018, 10:15 AM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
நான் இன்னும் ஃபுல் டைம் அரசியல்வாதியா மாறலப்பா !!  ரஜினிகாந்த் அதிரடி !!

சுருக்கம்

rajinikanth press meet in himalayas

நான் என்னுடைய கட்சியின் பெயரை அறிவிக்காததால் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கப் போவதாகவும் நடிகர் ரஜினி அறிவித்திருந்தார். இந் அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்புக்கு பின்னர், முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்த் இமய மலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஹபல்வேறு கோவில்களுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார். மேலும் ஆன்மிக குருக்களையும் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்.

15 நாட்கள் பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த் நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் சென்றார். அங்கு குகைகோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து ரிஷிகேஷ் பகுதியில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து  டேராடூனில்  செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், நான் என்னுடைய கட்சி பெயரை அறிவிக்காததால், இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை என கூறினார்.

தற்போது ஆன்மிக பயணம் மட்டுமே வந்துள்ளேன். எனவே அரசியல் பேசவேண்டிய களம் இது அல்ல. மனித வாழ்வின் நோக்கமே தன்னை உணர்வது தான். எனக்குள் இருப்பதை உணர, நான் ஆன்மிக வழியில் பயணிக்கிறேன் என்றும் ரஜினி தெரிவித்தார்..

என்னுடைய நண்பரும், நடிகருமான அமிதாப்பச்சன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்ட ரஜினிகாந்த்,  குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் இறந்தது எனக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

தீ விபத்தில்  மரணம் அடைந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும்,  இதற்காக அரசு ஏதாவது செய்யவேண்டும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்..

PREV
click me!

Recommended Stories

விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!
பணத்தை பெரிதாக நினைக்காமல் தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்- உதயநிதி..! நெஞ்சு புடைக்க புகழும் கருணாஸ்..!