தமிழக மக்கள் சாதாரணமானவர்கள் இல்ல… 2021 அரசியலில் பெரிய அற்புதத்தை, அதிசயத்தை நிகழ்த்துவார்கள் !! மீண்டும் தெறிக்கவிட்ட ரஜினி !!

Published : Nov 21, 2019, 08:53 PM ISTUpdated : Nov 21, 2019, 11:09 PM IST
தமிழக மக்கள் சாதாரணமானவர்கள் இல்ல… 2021 அரசியலில் பெரிய அற்புதத்தை, அதிசயத்தை நிகழ்த்துவார்கள் !! மீண்டும் தெறிக்கவிட்ட ரஜினி !!

சுருக்கம்

2021 அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என ரஜினிகாந்த் கூறி உள்ளார். இப்போதுள்ள ஆட்சி அகற்றப்பட்டு புதிய ஆட்சி அமையும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

கோவாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நான் வாங்கிய விருதுக்கு தமிழக மக்கள் தான் காரணம் அந்த விருதை தமிழக மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன் என கூறினார்.

கமல்ஹாசனுடன் நீங்கள் இணைந்து செயல்படுவேன் என கூறி உள்ளீர்கள் அப்படி இணைந்தால் யார் முதல்வர்  வேட்பாளர் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர் 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் கமலுடனான கூட்டணி என்பது குறித்து  தேர்தல் நேரத்தில்,  அப்போது உள்ள அரசியல் சூழ்நிலைக்கு  தகுந்தவாறு எடுக்க வேண்டிய முடிவு. 

அப்போது நான் எனது கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி அது குறித்து முடிவு அறிவிப்பேன். அதுவரை இது குறித்து நான் பேச விரும்பவில்லை என தெரிவித்தார்..

தமிழக மண்ணில் ஆன்மீக அரசியலுக்கு இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளாரே என கேட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய ரஜினிகாந்த், . 2021 அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை  அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!